fbpx
Connect with us

பெங்களூரில் பூகம்பம்.. பிரபல நடிகைகள் வீடுகள் குலுங்கியது.. பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம்..

Rakshita_cinemapettai

பெங்களூரில் பூகம்பம்.. பிரபல நடிகைகள் வீடுகள் குலுங்கியது.. பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம்..

பெங்களூரின் பல்வேறு இடங்களில் இன்று காலை சுமார் 7.30 மணி அளவில் லேசான பூகம்பம் ஏற்பட்டது. பெங்களூரின் காமாட்சி பாளையா, கிரிநகர், மல்லேஸ்வரம், எலகங்கா, ஹனுமந்த் நகர் போன்ற இடங்களில் இந்த பூகம்பம் உணரப்பட்டது. பூகம்பத்தால் வீடுகளில் வைக்கப்பட்டிருந்த பாத்திரங்கள் உருண்டு கீழே விழுந்தது. வீட்டின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டது.

இந்த பூகம்பத்தின் அதிர்வை சந்திரா லே அவுட்டில் உள்ள பிரபல நடிகை ரக்ஷிதா உணர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார். இவர் தமிழில் சிம்புவுடன் தம், விஜயுடன் மதுர படத்தில் கதாநாயகியாக நடித்தவர். அதே போல பழம்பெரும் நடிகை லீலாவதியும் பூகம்பத்தின் அதிர்வை உணர்ந்ததாக தெரிவித்து உள்ளார்.

ரிக்டர் அளவில் 3.1 என்ற அளவில பதிவாகி உள்ளது. பெங்களூர் மட்டும் அல்லாமல் ராம்நகர், மண்டியா, சாம்ராஜ்நகர் மாவட்டங்களிலும் லேசான பூகம்பம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அலறி அடித்து வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top