Connect with us
Cinemapettai

Cinemapettai

aadhaar card

Tamil Nadu | தமிழ் நாடு

ஆதார் கார்டு வைத்து பணம் சம்பாரிக்க ஒரு வழி.. 30 ஆயிரம் வரை அள்ளலாம்

இந்திய அரசு பல புதிய திட்டங்களை கொண்டு வருகிறது. மேலும் இந்தியா வளர்ச்சி அடைவதற்கு புதிய திட்டங்கள் கொண்டு வருவதாக தெரிவிக்கின்றனர். மத்திய அரசு ஆதார் கார்டு எனும் முறையை அறிமுகப்படுத்தி தற்போது அது நடைமுறையில் வெற்றகரமாக உள்ளது. இந்தியாவில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஆதார் எண் கொடுக்கப்பட்டுள்ளது.

எந்த அளவிற்கு நவீன முறைகள் வளர்ந்து வருகிறதோ அதே அளவிற்கு சிக்கல்களும் வளர்ந்து வருகின்றன. சமீபத்தில் ஆதார் கார்டு முறையில் சிக்கல் ஏற்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதையடுத்து இந்திய அரசாங்கம் ஆதார் கார்டு சில முக்கியமான ஆவணங்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் சிம் கார்டு, முன்பதிவு போன்றவைகளுக்கு ஆதார் கார்டை கட்டாயப்படுத்தக் கூடாது என இந்திய அரசாங்கம் தெரிவித்தது.

தற்போது ஆதார் ஆணையம் ஒரு போட்டி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இப்போட்டியில் ஆதார் குறித்த 15 சந்தேகங்களுக்கு பதிலளிக்கும் வகையில் வீடியோ அல்லது கிராபிக் முறையில் செய்து வெளியிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. இதற்காக மொத்தம் 48 பரிசுகள் காத்திருப்பதாக கூறியுள்ளனர். இந்த போட்டியில் அதிகபட்சமாக 30 ஆயிரம் ரூபாய் பரிசு பெறும் வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் இப்போட்டியில் கலந்து கொள்வதற்கு சில விதிமுறைகள் உள்ளது.

இப்போட்டியில் கலந்து கொள்வதற்கு இந்திய குடிமகனாக ஆதார் கார்டு உள்ளவரை மட்டுமே போட்டியில் பங்கேற்க முடியும் எனவும் தெரிவித்துள்ளனர். ஆதார் எண் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். வங்கி பற்றிய விவரங்கள் தேவை இல்லை என அதில் குறிப்பிட்டுள்ளனர். ஆதார் கார்டில் உள்ளபடி பெயர் மற்றும் மொபைல் நம்பர் அனைத்து விவரங்களும் இருக்கவேண்டும்.

இப்போட்டி ஒரு தனி நபருக்கான போட்டி என்பதால் குழுவாக செயல்பட்டு அதனை போட்டிக்கான படைப்புகளை வெளியேற்றக் கூடாது எனவும் தெரிவித்துள்ளனர். கற்பனைத் திறன் உள்ளவர்கள் இதில் வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் இதைப் பற்றி விவரங்களை தெரிந்துகொள்ள இந்த [email protected] மெயில் ஐடியை பின்பற்றவும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top