Connect with us
Cinemapettai

Cinemapettai

ajith-vijay

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அஜித்தும் விஜய்யும் ஒருவரை ஒருவர் தாக்கி பாடல்களை வைத்துக் கொண்ட சம்பவம்.. அம்பலப்படுத்திய பத்திரிகையாளர்

தற்போதைய தமிழ் சினிமாவின் இரு துருவங்களாக இருப்பவர்கள் தளபதி விஜய் மற்றும் தல அஜித். இருவரின் படங்களும் பெரிய அளவில் வசூல் செய்து வருகிறது. இருவரும் சுமாரான படங்கள் நடித்தால் கூட பெரிய அளவில் வசூலை ஈட்டி விடுகிறது. அந்த அளவு ரசிகர் பட்டாளங்களை கொண்டவர்கள்.

ஆனால் விஜய் மற்றும் அஜித் ஆகிய இருவருமே தொடர் தோல்விப் படங்களில் இருந்து தற்போது வெற்றி நாயகர்களாக நடித்து வருபவர்கள் தான். இருவரும் 2000 முதல் 2010 வரை வெற்றி படங்கள் கொடுத்த அளவைவிட தோல்வி படங்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.

அதே சமயத்தில் தளபதி விஜய்க்கும் தல அஜீத்துக்கும் ஏகப்பட்ட போட்டிகள் இருந்ததாகவும் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் பரவலாக சொல்லப்பட்டு வருகிறது. அப்போது தல அஜித் பிரபல பத்திரிகையாளர் ஒருவரிடம், விஜய் தன்னுடைய தொப்பையை கிண்டல் செய்வதற்காகவே தொப்பை வைத்து நடனமாடுகிறார் என கூறி வருத்தப்பட்ட தாகவும் தெரிவித்துள்ளார்.

அதேபோல் தல அஜித் தளபதி விஜய்யை நேரடியாக எதிர்ப்பதற்காக அட்டகாசம் படத்தில் வரும் உனக்கென்ன உனக்கென்ன பாடலை வைத்ததாக சொல்லப்பட்டது. மேலும் இருவரும் மற்றவர்களை தாக்கி மீம்ஸ் போடும் குழுவை நடத்தி வருவதாகவும் ஒரு குண்டை போட்டார்.

ஆனால் சமீபகாலமாக இந்த செய்தியைக் கூறிய அந்த பத்திரிக்கையாளரின் மீது ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். நிறைய தவறான தகவல்களை பரப்பி வருவதாகவும் குறிப்பிட்ட நடிகர்களை மட்டுமே உயர்த்திப் பேசுவதாகவும் பத்திரிகையாளர் பிஸ்மி மீது குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் பிஸ்மி மற்றும் அவரது குழுவினர் நடத்திவரும் வலைப்பேச்சு யூடியூப் சேனல்களில் இதுபோன்ற செயல்களில் அவர்கள் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டி வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top