வெஸ்ட் இண்டீஸ் அணியின் டுவைன் பிராவோ, தனது அடுத்த ஆல்பத்தில் கோலி, தோனியுடன் சேர்ந்து நடனமாடவுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் டுவைன் பிராவோ, இவர், மைதானத்தில் நடனமாடுவதில் மிகவும் பிரபலமானவர். கேட்ச் பிடித்த பின், விக்கெட் கைப்பற்றிய பின் இவர் ஆடும் நடனத்துக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

இவர் கிரிக்கெட் விளையாடுவதோடு மட்டும் இல்லாமல், பாட்டு பாடுவதிலும் கில்லாடி. தற்போது, இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடரில், குஜராத் அணிக்காக விளையாடும் இவர், காயம் காரணமாக போட்டிகளில் பங்கேற்காமல் உள்ளார். ஏற்கனவே சாம்பியன்ஸ் என்ற ஆல்பத்தை வெளியிட்டு பிரபலமானார்.

இந்நிலையில் இவர், இந்திய கேப்டன்களான தோனி, விராட் கோலி ஆகியோருடன் சேர்ந்து தனது அடுத்த ஆல்பத்தை வெளியிடவுள்ளார்.