Connect with us

உயிருடன் காருக்குள் எறியும் உருவம், வான்டட் லிஸ்டில் துல்கர் சல்மான்.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் குருப் பட டீசர்

kurup

Videos | வீடியோக்கள்

உயிருடன் காருக்குள் எறியும் உருவம், வான்டட் லிஸ்டில் துல்கர் சல்மான்.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் குருப் பட டீசர்

தமிழ் சினிமா ரசிகர்கள் சமீப காலமாக மலையாளத் திரைப்படங்களை அதிகம் பார்த்து வருகின்றனர். அந்த வகையில் பல மலையாள நடிகர்களும் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர்களாக வலம் வருகின்றனர்.

அதில் துல்கர் சல்மானுக்கு எப்போதுமே தமிழ் ரசிகர்கள் மனதில் தனி இடம் உண்டு. இந்த ஊரடங்கு சமயத்தில் அதிகம் பார்க்கப்பட்ட நடிகர்களின் படம் என்றால் அது துல்கர் சல்மான் நடித்த படங்கள்தான்.

ஒவ்வொரு படமும் வித்தியாசமான கதைக்களத்துடன் ரசிகர்களை ரசிக்க வைத்தது. அந்த வகையில் திரில்லர் அம்சத்துடன் உருவாகியிருக்கும் அடுத்த திரைப்படம் தான் குருப். தமிழில் மட்டுமில்லாமல் மொத்தம் ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது.

வித்தியாசமான கதைகளை தேடி தேடி நடித்து வரும் துல்கர் சல்மானின் கெட்டப் முதல் ஸ்டைல் வரை அனைத்தும் இந்த படத்தில் வித்தியாசமாக உள்ளதே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

மேலும் படத்தின் டீஸரை பார்க்கும்போதே சூப்பர்ஹிட் என்பதைப்போல ஒவ்வொரு காட்சியும் ரசிகர்கள் மனதிற்குள் என்னவாக இருக்கும் என்ற கேள்விகளை எழுப்பி வருகிறது. தமிழில் கடைசியாக துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் 50 கோடி வசூல் சாதனை செய்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவிலும் துல்கர் சல்மானுக்கு கணிசமான வரவேற்புகள் இருப்பதால் கண்டிப்பாக குருப் படம் மிகப்பெரிய வெற்றி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு சுசின் ஸ்யாம் என்பவர் இசையமைத்துள்ளார்.

சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
To Top