Reviews | விமர்சனங்கள்
போலீஸ் படங்களில் இது புது ரகமா இருக்கு.. துல்கர் சல்மானின் சல்யூட் விமர்சனம்
மோலிவுட் சினிமாவில் அதிக எதிர்பார்ப்புடன் பலரும் இந்தாண்டு பார்க்க காத்திருந்த படமே சல்யூட். சோனி லிவ் தலத்தில் நேரடி ரிலீஸ் ஆகியுள்ளது. பிரபலங்கள் பாபி – சஞ்சய் எழுதிய இப்படத்தை ரோஷன் ஆன்டிரியுஸ் இயக்கியுள்ளார். ஜேக்ஸ் பீஜோய் இசை, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங். துல்கர் சல்மான் இப்படத்தை தயாரித்து ஹீரோவாக போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார்.
கதை – சப் இன்ஸ்பெக்டர் துல்கர் சம்பளம் இன்றி இரண்டு வருடமாக விடுப்பில் இருக்கிறார். அவர் ஒரு நாள் தனது பழைய ஸ்டேஷன் செல்கிறார் அங்கு இரட்டை கொலை வழக்கு மற்றும் சாலை விதிகளை மீறிய இரண்டு கேஸ் பைல்களை கேட்கிறார்.
பிளாஷ்பேக்கில் துல்கர் சப் இன்ஸ்பெக்டர், அவரது அண்ணன் டிஎஸ்பி. துல்கர் சரகத்தில் தேர்தல் நடக்கும் நேரம், இரட்டை கொலை வழக்கு போலீசுக்கு சவாலாக இருக்கிறது. ஆட்டோ காரன் முரளி தான் குற்றவாளி என மற்ற இரண்டு போலீஸ் உறுதியாக சொல்ல, டூப்ளிகேட் ஆதாரம் ரெடி செய்கின்றனர் இந்த நால்வர் டீம். துல்கருக்கு இதில் உடன்பாடு இல்லை, சற்றே குழம்புகிறான். எனினும் முரளியை கைது செய்து கேஸை முடிக் கிறது போலீஸ்.
ஆனால் அந்த இரட்டை கொலை நடந்த வீட்டில் இருக்கும் செல் போனை ஒருவனிடம் பார்த்ததாக சொல்கிறார் போலீஸ். அவனை சென்று விசாரிக்கலாம் என துல்கர் சொல்ல, அண்ணன் வேண்டாம் நமது வேலைக்கே இது பிரச்சனை கொடுக்கும் எனவே விட்டு விடுங்கள், ஆராய வேண்டாம் என சொல்கிறார். துல்கர் லீவ் வாங்கிவிட்டு, வீட்டை விட்டு செல்கிறார்.
இரண்டு வருடம் கழித்து மீண்டும் துல்கர் இந்த கேஸை பற்றி கேட்டதும்கடுப்பாகிறார் அண்ணன். துல்கர் மீண்டும் அதே ஸ்டேஷனில் இன்சார்ஜ் எடுக்கிறார். போலி அடையாளம் வைத்த ஒருவன் தான் குற்றத்தை புரிந்துள்ளான் என துல்கர் கண்டுபிடிக்கிறார், அண்ணன் இவருக்கு இடமாற்ற உத்தரவை வழங்குகிறார்.
.எனினும் புதிய ஸ்டேஷனில் ஒரு பெண் கொடுத்த கேஸை விசாரிக்கும் பொழுது, அதுவும் இது போல பொய்யான ஆள்மாறாட்டம் என தெரிய வருகிறது . இரண்டு கேஸிலும் தேடும் குற்றவாளி ஒருவனே என்பதை உறுதி செய்கிறார்.
குற்றவாளியை கைது செய்தாரா, முரளிக்கு விடுதலை கிடைத்ததா, அண்ணன் மற்றும் பிற போலீசின் நிலை என்ன ஆனது என்பதே மீதி கதை.
சினிமாபேட்டை அலசல்– தரமான சஸ்பென்ஸ் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் இப்படம். சூப்பரான முதல் பாதி, சிறப்பான இரண்டாம் பாதி. ஆர்ப்பாட்டம் இல்லாத இசை பிளஸ், எடிட்டிங் மற்றும் ஒளிப்பதிவு டாப் க்ளாஸ். போலீஸ் வேலையில் உள்ள அழுத்தத்தை நமக்கு புரிய வைக்கிறது இப்படம்.
நேர்மையாக சாதிக்க துடிக்கும் ஆஃபீசர் இங்கு இருக்கும் சிஸ்டத்தில் சிக்கி எப்படி மனவேதனைக்கு உள்ளாகிறார் என துல்கர் நம் கண் முன்னே ஸ்க்ரீனில் கொண்டு வந்துள்ளார்.
சினிமாபேட்டை வெர்டிக்ட்– அணைத்து ரசிகர்களுக்கும் இப்படம் ட்ரீட் என சொல்லவிட முடியாது. சஸ்பென்ஸ் பட விரும்பிகளுக்கு கொண்டாட்டம் தான் இந்த சல்யூட். திரை அரங்கத்தில் பார்க்கும் பட்சத்தில் இன்னும் அதிக திருப்த்தி கொடுத்திருக்கும். எனினும் இப்படக்குழுவின் முயற்சிக்கு எங்களின் சல்யூட்.
சினிமாபேட்டை ரேட்டிங் 3.25 / 5
