செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

ராதிகாவுடன் ஏற்பட்ட சண்டை, கோபியை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போகும் பாக்கியா.. அப்பாவை திருத்திய இனியா

Bhakkiyalakhsmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், கோபி மீது பாக்கியா கம்ப்ளைன்ட் கொடுத்து இருந்ததால் அதை வாபஸ் வாங்க சொல்லி ஈஸ்வரி கிடைக்கிற கேப்பில் எல்லாம் பாக்கியாவிற்கு அட்வைஸ் பண்ணுகிறார். ஆனால் பாக்கியா இந்த விஷயத்தை தவிர நீங்க வேற என்ன சொன்னாலும் நான் கேட்பேன். ஆனால் நான் கொடுத்த கேசை மட்டும் வாபஸ் வாங்க மாட்டேன் என்று பிடிவாதமாக சொல்லிவிட்டார்.

அடுத்ததாக இனியா இன்னும் காணவில்லை என்று பாக்யா வாசலில் நின்று காத்துக் கொண்டிருக்கிறார். அப்பொழுது இனியாவை கூட்டிட்டு வந்து கோபி, பாக்கியாவிடம் ஒப்படைக்கிறார். அதன் பின் மகளை கொஞ்சம் பார்த்துக்கொள் என்று தன்மையாக சொல்லிவிட்டு ராதிகா வீட்டிற்கு கோபி கிளம்புகிறார். அங்கே போனதும் ராதிகா நான் போன் பண்ணதுக்கு நீங்க ஏன் எடுக்கவில்லை என்று கேட்கிறார்.

நான் இனியாவுடன் கொஞ்சம் பேசிக் கொண்டிருந்ததால் என்னால் உன் ஃபோனை எடுக்க முடியவில்லை என்று கூறுகிறார். உடனே இதை பெரிது படுத்தும் விதமாக ராதிகாவின் அம்மா சண்டையை மூட்டிவிடுகிறார். அதன் பிறகு ராதிகாவிற்கும் கோபிக்கும் சண்டை வர ஆரம்பித்து விட்டது. இருவரும் மாத்தி மாத்தி என் வாழ்க்கையில் நீ வரப் போய் தான் நிம்மதி சந்தோஷம் இல்லாமல் தவித்து வருகிறேன் என்று கோபி, ராதிகாவை பார்த்து சொல்ல ராதிகா கோபியை பார்த்து சொல்ல சண்டை பெருசாகிவிட்டது.

ஆனால் இதெல்லாம் பார்த்து மயூ தான் பாவம் பயப்பட ஆரம்பித்து விட்டார். ஆனாலும் இனியும் உன்னுடன் என்னால் இருக்க முடியாது என்பதற்கு ஏற்ப கோபி கோபமாக பேசிவிட்டு வெளியே போய் விடுகிறார். இதை பார்த்ததும் பயந்து போன மயுவை சமாதானப்படுத்தி ராதிகா தூங்க வைக்கிறார். வெளியே கோபமாக போன கோபி, இனியா சொன்ன வார்த்தைகள் எல்லாம் நினைத்து பீல் பண்ணுகிறார்.

நம் சுயநலமாக எடுத்த முடிவின் காரணமாக இனியா இந்த அளவுக்கு பாதிக்கப்பட்டு இருக்கிறார் என்று நினைத்து வருத்தம் அடைகிறார். அந்த வருத்தத்திலேயே அவருக்கு நெஞ்சு வலி வந்து விடுகிறது. உடனே ராதிகாவுக்கு போன் பண்ணுகிறார். ஆனால் ராதிகா, கோபி மீது கோபமாக இருப்பதால் போனை எடுக்காமல் உதாசீனப்படுத்தி விட்டார்.

அடுத்ததாக கோபிக்கு பாக்யாவின் ஞாபகம் தான் வந்தது. உடனே பாக்யாவிற்கு கால் பண்ணுகிறார், பாக்கியா இனியாவை சமாதானப்படுத்தி தூங்க வைத்துவிட்டு யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது கோபி போன் பண்ணுகிறார் என்று தெரிந்ததும் இவர் ஏன் இப்பொழுது கால் பண்ணுகிறார் என்று நினைக்கிறார். ஆனாலும் கோபி போன் பண்ணுகிறார் என்று தெரிந்ததும் பாக்கியா அட்டென்ட் பண்ணி பேசுகிறார்.

அப்பொழுது நெஞ்சுவலியால் கோபி துடிக்கிறார் என்று தெரிந்ததும் பாக்யா உடனே கோபி இருக்கும் இடத்திற்கு சென்று கோபியை கூட்டிட்டு ஹாஸ்பிடல் சேர்த்து விடுகிறார். கோபிக்கு ஹார்ட் அட்டாக் என்பதால் மருத்துவமனையில் ICU வைத்து சிகிச்சை நடைபெற்று வருகிறது. பிறகு அங்கே இனியா, பாக்யா, ஈஸ்வரி மற்றும் ராதிகா அனைவரும் வந்து கோபியை பார்ப்பதற்கு காத்துக் கொண்டிருக்கிறார்கள். இனியா பேசிய வார்த்தைகளால் கோபி மொத்தமாக திருந்திடுவார்.

- Advertisement -

Trending News