இழிவாக பேசிய பிரபல நடிகை! ஆண்கள் செய்த காரியம்! அம்மாடியோவ்!

தமிழில் காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420 போன்ற படங்களில் நடித்தவர் மேக்னா ராஜ். இவர் மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார்.

தற்போது இவர் இயக்குனர் ரமேஷ் இயக்கத்தில் ‘ஜிந்தா’ என்கிற கன்னட படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இதன் டீசர் வெளிவந்தது. இதில் ஆண்களை மேக்னா ராஜ் இழிவாக பேசுவது போல் ஒரு காட்சி இடம் பெற்றுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூருவில் உள்ள மேக்னா ராஜ் வீட்டின் முன் சிலர் முற்றுகையிட்டு, அவரை மன்னிப்பு கேட்குமாறு கோஷம் எழுப்பினர்.

அப்போது வீட்டில் இருந்த மேக்னா வெளியே வந்து, கதைக்கு தேவைப்பட்டதால் தான் இந்த காட்சி வைத்துள்ளதாகவும், நீங்கள் படம் வெளியாகியதும் படத்தை பார்த்து விட்டு கூறுங்கள் என கூறியுள்ளார்.

இதனை ஏற்க மறுத்த போராட்டக்காரர்கள், அங்கிருந்து செல்ல மறுத்துவிட்டனர். பின்னர் அங்கு வந்த போலீசார் அவர்களிடம் சமாதானம் கூறி கலைந்து செல்ல வைத்தனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Comments

comments