விரக்தியில் கண்டபடி உளறிய கேப்டன்.. ஐபிஎல் கோப்பை எங்களுக்கு இல்லை என சூசகமாக சொல்லிய டுப்லஸ்ஸிஸ்

2022 ஐபிஎல் போட்டிகள் ஆரம்பித்துவிட்டன. மும்பையில் கோலாகலமாக நடந்து வருகிறது. ஆரம்பித்த முதல் போட்டியிலேயே சென்னை அணி தோல்வியை தழுவியது. இந்த முறை சென்னை அணிக்கு தோனி கேப்டன் பொறுப்பை ரவீந்திர ஜடேஜாவிடம் கொடுத்துவிட்டார்.

நேற்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில், பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 205 ரன்கள் குவித்தது. அந்த அணியின் டூப்ளசிஸ் 88, விராட் கோலி 41, தினேஷ் கார்த்திக் 32 ரன்கள் என சிறப்பான பங்களிப்பைடூப்ளசிஸ் அளித்தனர்.

இறுதியில் இறங்கிய தினேஷ் கார்த்தி 14 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் அணியின் ஸ்கோரை மளமளவென்று உயர்த்தியது குறிப்பிடத்தக்கது. பின்னர் இறங்கிய பஞ்சாப் அணி, அனைவரின் சிறப்பான பங்களிப்பால், 19வது ஓவரில் 208 ரன்கள் அடித்து எளிதாக வெற்றி பெற்றது.

போட்டி முடிந்த பின்னர் பேட்டி கொடுத்த பெங்களூர் அணியின் கேப்டன் டூப்ளசிஸ், இதற்கு மேல் எங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. நாங்கள் முழு பலத்துடனும் எங்கள் முழு திறமையையும் பயன்படுத்தியும் தோற்று விட்டோம். இது எங்களுக்கு மனச்சோர்வு அளிக்கக்கூடிய தோல்வி.

நாங்கள் நடுவில் சில ஓவர்களை நன்றாக வீசினாலும், பனிப்பொழிவு முழுவதுமாக ஆட்டத்தின் போக்கை எங்கள் கையிலிருந்து மாற்றிவிட்டது. அதனால் தோற்று விட்டோம். இது ஈடுகட்ட முடியாத இழப்பு.

ஒவ்வொரு பந்தையும் பிடிப்பதற்காக எங்க வீரர்கள் பலரும் போராடினார்கள். ஒவ்வொருத்தர் முட்டியும் உடைந்து போனது தான் மிச்சம். இதற்கு மேல் போராட தைரியம் இல்லை, சோர்ந்துவிட்டோம் என்று முதல் போட்டியிலேயே டுப்லஸ்ஸிஸ், நாங்கள் இந்த கோப்பையை வெல்லப் போவதில்லை என்பதை சூசகமாக சொல்லி விட்டார்.

Sharing Is Caring:

அதிகம் படித்தவை