புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

கைமாறிய மியூசிக், DSP கேரியருக்கு கரும்புள்ளி.. புஷ்பா 2 ரிலீஸ் நேரத்தில் ஏற்பட்ட குழப்பம்

டிசம்பர் 5-ம் தேதி ‘புஷ்பா 2’ படம் வெளியாக உள்ளது. இதன் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இறுதிகட்ட படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது. இதனிடையே, படத்தின் பின்னணி இசையில் ஒரு குழப்பம் ஏற்பட்டுள்ளது.

புஷ்பா 1 படத்தின் முதல் பாகத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து அதற்கான தேசிய விருதையும் வென்றிருந்தார். இந்த நிலையில் இரண்டாம் பாகத்திற்கு, அவர் இசையமைத்தது பட ஹீரோ அல்லு அர்ஜுன்-க்கு பிடிக்கவில்லையாம். இதனால் தொடர்ந்து குழப்பங்கள் நிலவி வருகிறது..

யார் தான் இசையமைப்பாளர்?

பொதுவாகவே, டிசம்பர் 5-ம் தேதி ‘புஷ்பா 2’ படம் வெளியாக உள்ளது. இதன் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இறுதிகட்ட படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது. இதனிடையே, ஏற்கனவே இயக்குனருக்கும், அல்லு அர்ஜுனுக்கு சில பிரச்சனைகள் ஏற்பட்ட நிலையில், அந்த பிரச்சனை தான் தற்போது தொடரும் பிரச்சனைக்கு காரணமா என்பது தெரியவில்லை.

இதை தொடர்ந்து, தற்போது படம் தமன் மற்றும் காந்தாரா படத்தின் இசையமைப்பாளர், அஜனீஷ் கைக்கும் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இது இன்னும் உறுதிப்படுத்த படாத நிலையில், படத்திற்கு 3 பேர் இசையமைப்பார்கள், அல்லது தமனும் அஜனீஷும் இணைந்து இசையமைப்பார்கள் என்று கூறப்படுகிறது.

இது தேவி ஸ்ரீ பிரசாத் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், இது பட ரிலீஸ் தேதியை பாதிக்குமா என்ற கேள்வியும் தற்போது ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

Trending News