மது போதை.. கூட்டத்தில் காரை விட்டு ஏத்தி.. பதறவைக்கும் வீடியோ

கர்நாடகா மாநிலம் பெங்களூரில்  நடைமேடையின் மேல் கார் ஏறி அங்கு நின்று கொண்டிருந்தவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இந்த வீடியோ காட்சியை பார்க்கும்போது நெஞ்சை  பதறுகிறது.

பின்பு அந்த ஓட்டுனரை விசாரித்தபோது அவர் குடிபோதையில் தாறுமாறாக காரை ஓட்டிக் கொண்டு வந்து அப்பாவி பொதுமக்கள் மீது ஏற்றி உள்ளது தெரிய வந்தது.

உடனே பொதுமக்கள் அவரை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர், போலீசார் அந்த ஓட்டுனர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து  வருகின்றனர். இதுபோன்ற பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் ஓட்டுநர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை.

Leave a Comment