நடிகை ராதிகாவின் மகள் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு குடிபோதையில் கார் ஓட்டி காவல்துறை வேன் மீது அருண் விஜய் கார் மோதியதால் ஏற்பட்ட வழக்கில் தற்போது அருண்விஜய் தலைமறைவாக உள்ளார்.

இந்நிலையில் அருண்விஜய் காரை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்த ஆய்வாளர் சதீஷ் திடீரென ரயில்வே காவல்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த உத்தரவை டி.ஜி.பி. அசோக்குமார் நேற்று அறிவித்துள்ளார்.

அருண்விஜய்க்கு ஆதரவாக செய்யப்பட்டுள்ள இந்த நடவடிக்கையால் காவல்துறை அதிகாரிகள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. அருண்விஜய் என்ன அவ்வளவு பெரிய ஆளா? அவருக்காக ஒரு ஆய்வாளரே மாற்றப்படுகிறார் என்றால் இதன் பின்னணியில் யார் இருக்கின்றார்? என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுகிறது.