Tamil Nadu | தமிழ் நாடு
குடித்துவிட்டு வண்டி ஓட்டினால் இனி பைன் இல்லையாம்.. அதுக்கும் மேல வச்சி செய்ய போறாங்க
மது நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு என்று பாட்டிலில் மட்டும் பொறிக்கப்பட்டிருக்கும். ஆனால் அரசின் முதுகெலும்பு மது விற்பனை தான் விவசாயம் அல்ல என்பதை நொடிக்கு ஒரு முறை நிரூபித்துக் கொண்டே இருப்பார்கள்.
இந்த நிலையில் இன்று சென்னையில் தொடரப்பட்ட உயர் நீதிமன்ற வழக்கில் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளது. மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதால் பாதிக்கப்பட்ட ஒருவர் இழப்பீடு கேட்டு தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அவர்களது லைசென்ஸ் ரத்து செய்யப்பட வேண்டும். போலீசார் ஒரு மாதத்திற்கு இவர்களின் பட்டியலை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும் என்ற கட்டளைகளை போட்டுள்ளது. இதற்காக தனி போலீஸ் படை அமைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.
இதனால் குடிமக்கள் தற்போது கலங்கி போய் உள்ளனர். ஏற்கனவே குடிபோதையில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் ஓட்டினால் பத்தாயிரம் வரை அபராதம் கட்டவேண்டும் என்ற சூழ்நிலையில் இந்த திடீர் உத்தரவு மக்களை கொரோன விட பீதியை கிளப்பியுள்ளது.
இனி குடிப்பதாக இருந்தால் ஒயின்ஷாப்பில் வாங்கிக்கொண்டு போய் வீட்டில் பொண்டாட்டியிடம் அடிபட்டு மிதிபட்டு குடிக்க வேண்டியதான் என்று இணையதளத்தில் செய்திகள் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
