Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஒரே பிரம்மில் அக்ஷய் குமார், அஜய் தேவ்கன், ரன்வீர் சிங். வைரலாது மாஸான போலீஸ் போஸ்டர்
Published on
பாலிவுட்டில் மாஸ் மசாலா ஆக்ஷன் படங்களை இயக்கி வெற்றி பெறுவதில் வல்லவர் ரோஹித் ஷெட்டி. இவர் தனது போலீஸ் யூனிவேர்சல் இயக்கும் நான்காவது படமே “சூர்யவன்ஷி”; அக்ஷய் குமார் ஹீரோ. இதற்கு முன் அஜய் தேவ்கன் அவர்களை வைத்து “சிங்கம்” இரண்டு பார்ட்; ரன்வீர் சிங் வைத்து “சிம்பா” இயக்கினார்.
அக்ஷய் குமார் இப்படத்தில் ATS தலைவராக (தீவிரவாத தடுப்பு பிரிவு) வீர் சூர்யவன்ஷி என்ற ரோலில் நடிக்கிறாராம். அவர் மனைவி ரோலில் கத்ரீனா கைப் நடிக்கிறார்.
இப்படத்தில் ரன்வீர் மற்றும் தேவ்கன் கெஸ்ட் ரோலில் நடிக்கின்றனர். இவர்கள் மூவரும் இருப்பது போன்ற போட்டோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

sooryavanshi
