Connect with us
Cinemapettai

Cinemapettai

Reviews | விமர்சனங்கள்

தரமான க்ரைம் திரில்லர்- மோகன் லாலின் திரிஷ்யம் 2 விமர்சனம்

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன் லால், மீனா, அன்சிபா ஹாசன், எஸ்தர் அணில் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த படம் த்ரிஷ்யம். மகள் தற்காப்புக்கு முயன்று செய்த கொலையை மறைக்க, தன் குடும்பத்தை போலீசிடம் இருந்து பாதுகாக்க ஜார்ஜ் குட்டி எடுக்கும் முயற்சி தான் முழு படமும்.

இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, சீன மொழியில் கூட ரிமேக் ஆனது. இப்படத்தின் இரண்டாம் பாகம் தான் சமீபத்தில் கொரானா கட்டுப்பாடு உள்ள காரணத்தால் திரையரங்க ரிலீஸ் செல்லாமல், அமேசான் ப்ரைம் தளத்தில் நேரடி ரிலீஸ் ஆகியுள்ளது.

கதை – சென்ற பார்ட் முடிந்து ஆறாம் வருட தொடர்ச்சியாகவே ஆரம்பிக்கிறது படம். கேபிள் ஆஃபீஸ் நடத்திய நம் ஹீரோ இப்போ தியேட்டர் ஓனர், படம் தயாரிக்கும் ஆசையும் வந்துவிட்டது அவருக்கு. இன்றும் ஊர் மக்கள் ஜார்ஜ் குட்டி – வருண் பிரபாகர் கேஸ் பற்றி கிசு கிசுத்துதான் வருகின்றனர்.

இன்றும் மனைவி மற்றும் மகள் பதற்றத்தில் இருந்தாலும், ஹீரோ பெரிதாக எதுவும் கண்டுகொள்ளாதது போலவே செல்கிறது கதை. போலீஸ் அண்டர் கவர் ஸ்டைலில்  இவர்களை கண்காணிக்கின்றனர். ஆறு வருடம் கழித்து ஜெயிலில் இருந்து ரிலீஸ் ஆன ஒருவன் என ஜார்ஜ் குட்டி சிக்கலில் சிக்குகிறார்.

போலீசில் நான் தான் கொலை செய்தேன் என சொல்லிவிடுகிறான், குடும்பத்தை விட்டு விடும் பட்சத்தில் சரண்டர் ஆவதாகவும் சொல்கிறான். இரண்டு மணிநேர படம் முடிந்துவிட, கடைசி 30 நிமிடத்தில் நம் ஹீரோ ஆடும் mind game தான் கிளைமாக்ஸ்.

சினிமாபேட்டை அலசல்– முதல் படத்திற்கு ஏற்ற இரண்டாம் பார்ட் தான் இது. துளியும் பிசுறு இல்லாமல் கதை மற்றும் திரைக்கதையில் அசத்திவிட்டனர் இந்த டீம். பரபரப்பான காட்சிகள் இல்லை, எனினும் நாம் பதற்றத்தில்  படம் பார்க்கும் சூழல் தான் ஏற்பட்டுள்ளது.

சுடுகாட்டில் ஒருவனை நட்பாக்குவது, forensic department ஆசாமியின் பலவீனத்தை உபயோகிப்பது, எழுத்தாளர் வைத்து ட்ரிக்ஸ் ஆடுவது என இயக்குனர் அசத்தியுள்ளார்.

சினிமாபேட்டை வெர்டிகட்– திரையரங்க ரிலீஸ் ஆகவேண்டிய படம், எனினும் தாராளமாக இணையத்தில் இப்படத்தை குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கலாம்.

சினிமாபேட்டை ரேட்டிங் 3 / 5

 

Continue Reading
To Top