Tamil Nadu | தமிழ் நாடு
சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறப்பு.. இதுதான் காரணமாம், ‘குடி’மகன்கள் ஹேப்பி
லாக் டவுன் என்பதால் சென்னையில் மட்டும் மதுக்கடைகள் மூடப்பட்டு இருந்தன. தற்போது படிப்படியாக கொரோனாவின் பாதிப்பு குறைந்து வருவதால் மதுபான சில்லறை விற்பனைக்கு வரும் 18ம் தேதி முதல் திறக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மதுபான சில்லரை விற்பனை காலை 10 மணி முதல் 7 மணி வரை திறந்திருக்கும். மேலும் மால் மற்றும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் இருக்கும் மதுபான கடைகள் இயங்காது. ஒரு நாளைக்கு ஒரு கடையில் 500 டோக்கன் மட்டுமே வழங்கப்படும்.
மதுபான கடைகளுக்கு முகக்கவசம் முக்கியமாக அணிந்து வரவேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.இது போன்ற கட்டுப்பாடுகளுடன் இன்னும் இரண்டு தினங்களில் மதுக்கடைகளை சென்னையிலும் திறக்க உள்ளனர். இதனால் மது பிரியர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
ஏற்கனவே சென்னைக்கு புறநகரங்களில் உள்ள மதுக் கடைகளில் இருந்து மது வாங்கிக்கொண்டு வந்து, நகரத்தினுள் இரண்டு மடங்கு விலை வைத்து விற்று வந்தனர். அதிலிருந்து மது பிரியர்களை விடுவிக்க வேண்டும், இதனால் ஏற்படும் கொலை சம்பவங்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அரசு இந்த முடிவை எடுத்து உள்ளது.
அதுமட்டுமில்லாமல் வரும் தேர்தலில் வாக்கு வாங்க முடியாத என்ற பயமும் வந்து விட்டதாம், அரசின் வருமானம் மதுக்கடைகளை மட்டுமே நம்பி உள்ளது என்று சொன்னால் எவ்வளவு அசிங்கம்.
