Connect with us

Cinemapettai

Zomato, Swiggy மூலம் வீட்டிற்கே வரும் மதுபாட்டில்கள்.. நம்மள குடிக்க வைக்க அரசு எவளோ கஷ்டப்படுது

alcohol-zomato-delivery

Tamil Nadu | தமிழ் நாடு

Zomato, Swiggy மூலம் வீட்டிற்கே வரும் மதுபாட்டில்கள்.. நம்மள குடிக்க வைக்க அரசு எவளோ கஷ்டப்படுது

ஊரடங்கு உத்தரவு ஒருபுறம் கழுத்தை நெரித்துக் கொண்டு இருந்தாலும் தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை இரண்டு நாட்கள் திறந்துவைத்து பெரும் வேதனையில் மூழ்கடித்து விட்டது என்றுதான் கூறவேண்டும்.

நேற்று மக்கள் நீதி மையம் கமல் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தொடரப்பட்ட வழக்கு டாஸ்மாக் கடைகளை ஊரடங்கு உத்தரவு முடியும்வரை திறக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் மதுபாட்டில்களை விற்றுக் கொள்ளலாம் என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை அறிந்த Zomato, Swiggy நிறுவனங்கள் இதற்காக தயாராகிக் கொண்டு வருகிறது.

அதாவது உணவு டெலிவரி செய்வது போன்று மது பாட்டில்களையும் ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம், இதனை அரசின் முழு கண்காணிப்பில் வைத்து எப்படி டெலிவரி செய்வது என்ற வரைமுறைகளை தயார் செய்து வருகிறார்களாம்.

தமிழ்நாட்டில் மட்டும் சென்னை இல்லாமல் முதல்நாளில் 172 கோடி வருமானம் ஈட்டியுள்ளது, இரண்டாவது நாள் 100 கோடியை தாண்டி விட்டதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.

இதுபோன்ற தமிழக அரசு மது விற்பனையில் இறங்குவதற்கு இன்னொரு முக்கிய காரணம் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. அதாவது 150 முதல் 200 கோடி மதிப்புள்ள மதுபாட்டில்கள் ஸ்டாக் இருந்ததாகவும், அதனை தற்போது விற்பனை செய்து விட்டார்களாம்.

துணிக் கடைகளில் ஸ்டாக் கிளியரன்ஸ் செய்வது போன்று எக்ஸ்பைரி டேட் முடிவதற்குள் அனைத்து மது பாட்டில்களும் விற்கப்பட்டுள்ளன. இதுதான் இதனுடைய நோக்கம் என்று விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

வெவ்வேறு இடங்களுக்கு சென்ற மக்களுக்கு இந்த வைரஸ் பாதிப்பு உள்ளதாக தெரிவித்துள்ளனர். விரைவில் இதனைக் கட்டுக்குள் கொண்டுவந்து விடுவோம், சுமுகமான சூழ்நிலையை தமிழ்நாட்டில் ஏற்படுத்துவோம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.

Continue Reading

More in Tamil Nadu | தமிழ் நாடு

Advertisement

கண்டிப்பா இதையும் படிங்க

Advertisement
To Top