Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தண்ணி அடித்து தான் விபத்து ஏற்பட்டதா? பிரபல டிவி நடிகை சுனிதா

பிரபல தொலைக்காட்சியில் நடன கலைஞராக இருக்கும் சுனிதா கோகாய் மது அருந்தி விட்டு கார் ஓட்டி விபத்து ஏற்பட்ட நிகழ்வுக்கு விளக்கம் அளித்து இருக்கிறார்.

அசாம் கவுகாத்தியை சேர்ந்தவர் சுனிதா. நடனத்தின் மீது ஆர்வம் அதிகம் என்பதால் பல நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இண்டியனா டான்ஸ், ஜோடி நம்பர் 1 ஆகிய ரியாலிட்டி ஷோக்களில் ஆடியதன் மூலம் புகழ் பெற்றவர். கொஞ்சி கொஞ்சி இவர் பேசும் தமிழுக்கு ரசிகர்கள் அதிகமாக இருக்கிறார்கள். இன்று காலை இவரின் கார் பெரும் விபத்தை சந்தித்தது. அதில் இருந்த சுனிதா, குடித்து இருந்ததாக புகார் தெரிவித்தனர். விபத்துக்கு அவர் கார் தான் முக்கிய காரணம் என்பதால் மக்கள் அவரை திட்டி தீர்த்தனர். ஆனால் சுனிதா ஏன் என்ற வார்த்தையை தவிர வேறு எதுவும் பேசவில்லை எனக் கூறப்படுகிறது. பின், அந்த இடத்துக்கு வந்த காவல்துறை அதிகாரி சுனிதாவின் பாதுகாப்பு கருதி அந்த இடத்தை விட்டு கிளம்ப சொன்னதாக கூறப்படுகிறது.

இந்த செய்தி, சின்னத்திரையிலும், அவர் ரசிகர்களிடமும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அவர் மது குடித்து விட்டு கார் விபத்தை ஏற்படுத்திய சம்பவம் குறித்த வீடியோவும் இணையத்தளங்களில் வெகுவாக பரவியது. இந்நிலையில், விபத்து குறித்து விஜய் டிவி சுனிதா மனம் திறந்து இருக்கிறார்.

நான் மதுக் குடித்ததாக சமூக வலைத்தளங்களில் செய்தி தீயாக பரவி வருகிறது. அந்த பழக்கம் எனக்கு அறவே இல்லை. மேலும், எனக்கு கார் ஓட்ட தெரியாது. அதற்கான ஓட்டுநர் உரிமமும் என்னிடம் இல்லை. நான் எப்போதுமே ஓட்டுநர் தனியாக வைத்துக் கொண்டு தான் பயணிப்பேன். என் டிரைவர் மது குடித்து இருக்கிறாரே என அறிந்து கொண்ட பின்னரே காரை ஓட்ட அனுமதிப்பேன் சம்பவம் நடந்த போது, நான் பின் சீட்டில் அமர்ந்து தூங்கி கொண்டிருந்தேன்.

என் ஓட்டுநரால் தான் விபத்து ஏற்பட்டது. என் கார் மோதி விபத்தில் சிக்கியரை பார்த்தேன். அவர்களுக்கு எதுவும் ஆகவில்லை என்பதை உணர்ந்துகொண்டேன். ஆனால், அங்கிருந்த மக்கள் நான் தான் குடித்து விட்டு விபத்து ஏற்படுத்தியதாக நினைத்துக்கொண்டார்கள். அதனால், என்னிடம் கோபமாக பேசினார்கள். எனக்கு தமிழ் பேச அவ்வளவாக தெரியாது. இதனால், அவர்கள் பேசியது எனக்கு சுத்தமாக புரியவில்லை. என் மீது கோபமாக இருக்கிறார்கள் என்று மட்டும் தெரிந்து கொண்டேன் எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

To Top