fbpx
Connect with us

வெகுநாள் கண்ட கனவை தட்டித் தூக்கிய பென் ஸ்டோக்ஸ்! அடுத்தடுத்து ஏற்பட்ட எதிர்பாராத திருப்பம்!

ben-stokes

Sports | விளையாட்டு

வெகுநாள் கண்ட கனவை தட்டித் தூக்கிய பென் ஸ்டோக்ஸ்! அடுத்தடுத்து ஏற்பட்ட எதிர்பாராத திருப்பம்!

இந்த சீசனில் ஐபிஎல்-லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிவரும் பென் ஸ்டோக்ஸ், இவர் ஐபிஎல் ஆரம்ப போட்டிகளில் தனது சொந்த காரணங்களால் இணையவில்லை.

அதன் பின்னர் ஆடிய போட்டிகளில் நடு வரிசையில் களமிறங்கி தனது பங்களிப்பை வெளிப்படுத்தினார்.

மாறாக துவக்க வீரராக களமிறக்கப்பட்ட அவர் ஆரம்ப போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தையும் வழங்கவில்லை. ஆனால் கடந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சதமடித்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இந்நிலையில், ராயல்ஸ் அணியில் தனக்கு கொடுக்கப்பட்டுள்ள இந்த துவக்க வீரருக்கான நிலை, தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் தான் தொடர்ந்து இதில் தொடர விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் இங்கிலாந்து அணியில் ஜெய்சன் ராய், டாம் பான்டன், ஜானி பேர்ஸ்டோ, அலெக்ஸ் ஹேல்ஸ் போன்ற வீரர்கள் துவக்க வீரர்களாக களமிறங்கும் நிலையில், தனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும்,

ஆனால் தற்போது ராயல்ஸ் அணியில் அந்த வாய்ப்பு தனக்கு கிடைத்துள்ளது, அதை தான் மகிழ்ச்சியுடன் எதிர்கொள்வதாகவும் அவர் மேலும் கூறினார்.

Continue Reading
To Top