Tamil Cinema News | சினிமா செய்திகள்
கனவு நிறைவேறியது! மார் தட்டும் ரோமியோ: ஜெயம் ரவி
என்னுடைய கனவு தற்போது நிறைவேறியது என்று ரோமியோ ஜூலியட் ஹீரோ ஜெயம் ரவி தற்போது பெருமையுடன் தெரிவித்துள்ளார்.
சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ‘சங்கமித்ரா’. இப் படம் 8ம் நூற்றாண்டு கதையாக உருவாகவுள்ளது. இப்படத்தில் ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன் உள்பட பலர் நடிக்கின்றனர். வாள்வீச்சில் திறமை பெற்ற வீராங்கனையாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். இதற்காக லண்டன் சென்று, அங்குள்ள நிபுணரிடம் வாள்வீச்சு கற்று வருகிறார்.
இந்நிலையில், பிரான்ஸில் நடக்கும் 70வது கேன்ஸ் திரைப்பட விழாவில் என்னுடைய படமான சங்கமித்ரா படத்தின் அறிமுக விழா நாளை (18-05-17) நடக்கிறது. இதன் மூலம் என்னுடைய கனவு நிறைவேறியது என்று ஜெயம் ரவி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கேன்ஸ் பட விழாவி அறிமுகம் செய்யப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை மாதம் சென்னையில் பிரத்யேக செட்டுடன் தொடங்கப்படயிருக்கிறது.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
