Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஒரே படத்தில் எனது இரண்டு ஆசையும் நிறைவேறி விட்டது – விக்ரம் பிரபு !
விக்ரம் பிரபு
கும்கி வாயிலாக அறிமுகமானார். சரசரவென அடுத்தடுத்து படங்கள், படமும் டீசண்ட் வசூல் என்று மனிதர் தன் கால் ஷீட்டில் எப்பொழுதுமே பிஸி தான். விக்ரம் பிரபுஅசுரகுரு, துப்பாக்கி முனை என இரண்டு படங்களில் நடிப்பது நாம் அறிந்த விஷயமே , இந்நிலையில் இவர் நடிப்பில் முழு ஷூட்டிங் முடிந்து ஒரு படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.
60 வயது மாநிறம்

60 vayathu maniram
கலைப்புலி தாணு தயாரிப்பில் உருவாகியுள்ள படம். அப்பா – மகன் செண்டிமெண்ட் ட்ராமா. அப்பாவாக பிரகாஷ்ராஜ் , மகனாக விக்ரம் பிரபு, முக்கிய வேடத்தில் சமுத்திரக்கனி நடித்துள்ளார். படத்தை இயக்குனர் ராதா மோகன் இயக்கியுள்ளார்.இளையராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
#60VayaduMaaniram
Need your love & support as always ?? pic.twitter.com/1CqtB2wB4K— Vikram Prabhu (@iamVikramPrabhu) July 31, 2018
கன்னடத்தில் வெளியான சூப்பர் ஹிட் படம் ஒன்றின் ரீ மேக். பிஸியாக இருக்கும் மகன், அப்பாவை முதியோர் இல்லத்தில் சேர்க்கும் மகன். மறதி வந்து அவதிப்படும் தந்தை. அப்பா தீடீரென்று காணாமல் போக, அங்குள்ள டாக்டர் துணை கொண்டு அவரை தேடுகிறார் ஹீரோ. இடத்தை மறந்த தந்தை ஒரு ரௌடியிடம் வேனில் ஏறுகிறார். அதன் பின் நடக்கும் சுவாரசியமான சம்பவங்களை படத்தின் மீதி கதை.

vikram prabhu twitter
இந்நிலையில் ட்விட்டரில் ‘தனது மிகப்பெரிய கனவு ராதா மோகன் படத்தில் நடிப்பது என்றும், அதை விட பெரிய ஆசை இளையராஜா இசையில் நடிப்பது என்றும் , இந்த இரண்டும் ஒரே படத்தில் நிஜம் ஆகிவிட்டது. இவ்வளவு நாடுகளாக அறிவிக்காமல் ரகசியமாக வைத்ததை, தற்பொழுது மகிழ்ச்சியாக வெளியிடுகிறேன். இந்த படம் மற்றும் படக்குழுவுடன் பனி புரிந்தது பெருமையாக உள்ளது’ என்று கூறியுள்ளார்.
சினிமாபேட்டை காமெண்ட்ஸ்
ஒரே கல்லில் ரெண்டு மாங்கா !!!1
