Nazriya_cinemapettai

அந்த நடிகை ஆந்திரா, கேரளா  கூட்டு தயாரிப்பு..! அப்பா கேரளா அம்மா ஆந்திரா. தெலுங்கில்  அறிமுகம் ஆனாலும் கேரளா படங்கள் தான் இவரை புகழின் உச்சம் கொண்டு போய் சேர்த்தது.

அதன் பின் நல்ல நேரம் வர ஒரு காதல் படத்தில் அறிமுகம் ஆனார். படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

அவ்வளவு  தான் தமிழ் நாட்டு பாசக்கார பயபுள்ளைகளுக்கு இவரின் கீர்த்தி தெரிந்து கொண்டாட ஆரம்பித்தார்கள்.

 

கனவுக் கன்னி ஆனார். முகநூலில் இந்த நடிகையை முகப்பு படமாக வைத்துக் கொண்டாடினார்கள் இளைஞர்கள்.

போனிலும் இவர் படங்களை வைத்துக் கொண்டார்கள். கனவில் டூயட் பாடினார்கள். அப்படி ஒரு கீர்த்திமிக்கவர் அந்த நடிகை. இவரின் புகழ் பெங்களூரு வரை கொடிகட்டிப் பறந்தது.

இவரின் படப்பிடிப்பு ஒன்று மைசூரில் நடந்தது. அம்மா இரண்டு நாட்கள் கூட இருந்து விட்டு அச்சனை பார்க்க கிளம்பிவிட்டார்.

அதிகம் படித்தவை:  நயன்தாராவிற்கு ஜோடியாக நடிக்க மறுத்த பார்த்திபன்! இந்த பிளாஷ்பேக் யாருக்கு தெரியும் ?

நடிகைக்கு ஒரே குஷி. தனக்கு அன்று படப் பிடிப்பு. காரை எடுத்துக் கொண்டு மைசூர் வீதிகளில் புயலெனப் பறந்தார்.

மைசூர்  போலீஸ்  உயர்அதிகாரி காரில் சென்று கொண்டிருந்தார். நடிகை யாரையும் கண்டு கொள்ளும் நிலையில் இல்லை.

கொஞ்சம் உற்சாக பானம் வேறு.கார் தறிகெட்டு பறந்து அதிகாரி காரை ஒரு இடி இடித்துவிட்டு பறக்க கடும் உஷ்ணம் ஆனார் போலீஸ் அதிகாரி.

புடிடா அந்தக் காரை என்று கூற ஆங்காங்கே தகவல் பறக்க ஒரு இடத்தில நடிகையின் காரை மடக்கிப் பிடித்தார்கள்.

அதிகாரியும் உயிரைக் கையில் பிடித்தபடி வந்து சேர்ந்தார். கன்னத்தில் பளார் என்று ஒரு அடி. “அம்மே” என்று கதறினார்.

காரையும் நடிகையையும் ஸ்டேஷனுக்கு தூக்கினார்கள். நான் ‘அந்த’ நடிகை என்று எவ்வளவோ கெஞ்சினார்.பார்க்க ‘பயங்கரமா கருப்பா’ இருக்கே நாங்க எப்படி நம்புறது என்றார் அந்த இடி வாங்கிய அதிகாரி.

அதிகம் படித்தவை:  விஷாலின் அடுத்த அதிரேடி..! அணைத்து tv சேனல்களும் மூடப்படுமோ ???

இதற்குள் நடிகையைக் காணோம் என்று படப்பிடிப்பு குழு கதற ஆரம்பித்தது. கொச்சினில் சச்சின் ஆட்டம் பார்த்துக் கொண்டிருந்த அம்மே அலறியது.

எண்ட மோளே ..என்றபடி பிளைட் பிடித்து பறந்து வர, இரவு முழுக்க லாக்கப். அதன் பின் ஆத்திரம் தணிந்த அதிகாரி படப்பிடிப்பு குழுவிற்கு போன் போட்டார்.

கதறியபடி ஓடி வந்தது குழு. அம்மேவும் வந்து சேர மன்னிப்புக் கேட்டு மகளை அழைத்துப் போனார்கள்.

“எத்தினி வாட்டி சொல்றது மோளே..மேக்கப் இல்லாமல் போகாதேன்னு” என்று  அம்மே சிணுங்க இப்போதெல்லாம் ஆ பெண் குட்டி மேக்கப் போட்டுக் கொண்டு தான் காரை எடுக்கிறதாம்.

இங்கே மேக்கப் இல்லாமல் சில நடிகையரை பாருங்கள் மக்களே..பயந்துடாதிங்க..!