rahul-dravid

யூ 19 அணியுடன் சென்ற அணைத்து பணியாளர்களுக்கும் ஒரே மாதிரி பரிசுத் தொகை வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்று டிராவிட் பிசிசிஐக்கு தெரிவித்துள்ளார்.

u 19 wc

நியூசிலாந்தில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. ஒரு போட்டியில் கூட இந்த அணி தோற்கவில்லை.

u 19 wc

இதற்காக வெற்றி பெற்ற இந்திய அணி வீரர்களுக்கு தலா 30 லட்சம் கேஷ் பரிசு கொடுக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. மேலும் தலைமை பயிற்சியாளர் ராகுல் ட்ராவிடுக்கு 50 லட்சமும் பிற ஸ்டாப் அவர்களுக்கு 20 லட்சமும் வழங்க முடிவு செய்துள்ளது.

அதிகம் படித்தவை:  சபாஷ் ராயுடு ! மீண்டும் சி எஸ் கே கடைசி ஓவரில் வெற்றி !
team india

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட். பந்துவீச்சுப் பயிற்சியாளராக பராஸ் மாம்ப்ரி, ஃபீல்டிங் பயிற்சியாளராக அபே சர்மா, பிசியோதெரபிஸ்ட்டாக யோகேஷ் பார்மர், ட்ரெயினர் ஆனந்த் தந்த்ரே, மக்னேஷ் கெய்க்வாட், வீடியோ அனலிஸ்ட்டாக தேவ்ராஜ் ராவத் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

Dravid Rahul with Prithvi Shaw

சமீபத்தில் டிராவிட் அளித்த பேட்டியில் “ஜூனியர் உலக கோப்பை வெற்றிக்கு பிறகு அனைவரது கவனமும் என்மீது மட்டுமே இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. உதவி பணியாளர்களின் பணியை குறைத்து சொல்ல முடியாது. அனைவரும் ஒரு அணியாக இணைந்து பணியாற்றினோம். ஒவ்வொருவர் பெயராக சொல்ல விரும்பவில்லை என்றாலும், உதவி பணியாளர்கள் அதிக உழைப்பை கொட்டினர். நமது அணிக்காக இயன்றவரை பெஸ்ட் என்பதை கொடுத்தோம்.” என்றார் .

அதிகம் படித்தவை:  தனி ஒருவனாக கொல்கத்தாவின் வரலாற்றை மாற்றி எழுதிய ராகுல் திருப்பதி.. சொந்த மண்ணில் வீழ்ந்தது கொல்கத்தா !

மேலும், ‘அணியின் வெற்றிக்குக் காரணமான அத்தனை பேருக்கும் சமமான அளவில் பரிசுத்தொகை வழங்க வேண்டும். துளிகூட வேறுபாடு காட்டக் கூடாது’ என்று பிசிசிஐ-யிடம் அவர் கோரிக்கை வைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சினிமாபேட்டை கமெண்ட்ஸ்

இவர்தான்யா அசல் ஜென்டில்மேன் !!