இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தோனி மற்றும் யுவராஜ் சிங்கின் நிலை குறித்து பி.சி.சி.ஐ விரைவில் முடிவு செய்ய வேண்டும் என்று டிராவிட் கூறியுள்ளார்.

மினி உலகக்கோப்பை என்று அழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த சீனியர் வீரர்களான தோனி மற்றும் யுவராஜ் சிங் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு செயல்படவில்லை, அதிலும் குறிப்பாக பாகிஸ்தான் அணிக்கு எதிரான இறுதி போட்டியில் இருவரும் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து வெளியேறி ஏமாற்றினர். இதனால் தோனி மற்றும் யுவராஜ் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில் இது குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் டிராவிட் இன்னும் இரண்டு ஆண்டுகளில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வர இருக்கிறது, இதனை கருத்தில் கொண்டு வலுவான இந்திய அணியை கட்டமைக்க வேண்டியது பி.சி.சி.ஐ.,யின் கடமை”.

மேலும் இந்திய அணியில் அடுத்த 2 ஆண்டுகளில் தோனி  மற்றும் யுவராஜ் சிங்கின் பங்கு என்னவாக இருக்கப்போகிறது என்பதை பி.சி.சி.ஐ முடிவெடுக்க இதுவே சரியான தருணம்.  2019 உலகக்கோப்பை உட்பட எதிர்காலத்தில் நடைபெறும் தொடர்களில் தோனி மற்றும் யுவராஜை தேர்வு செய்யும் விவகாரத்தினை தேர்வுக்குழுவைச் சேர்ந்தவர்கள் கவனமாகக் கையாள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here