Connect with us
Cinemapettai

Cinemapettai

Draupathi-richard

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கமல் பட டீஸரை கலாய்த்த திரௌபதி இயக்குனர்.. வறுத்தெடுக்கும் ரசிகர்கள்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், கமல்ஹாசன் தயாரித்து நடிக்க உள்ள படம் தான் ‘விக்ரம்’. இந்தப் படத்தின் டைட்டில் டீசர் நவம்பர் மாதம் 7ம் தேதி வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

மேலும் இந்த டீசர் வெளியான சிறிது நேரத்திலேயே இது நெட்பிளிக்ஸ் தளத்தில் உள்ள ‘நார்கோஸ் மெக்சிகோ சீசன் 2’ என்ற வெப் தொடரின் டீசரை கொஞ்சம் மாற்றி அமைக்கப்பட்ட காப்பி டீசர் என்ற தகவலும் வைரலானது.

இந்த நிலையில் ‘விக்ரம்’ பட டீசரை ‘திரௌபதி’ பட இயக்குனரான மோகன் கலாய்க்கும் மாதிரி பதிவு ஒன்றை பதிவிட்டு கமல் ரசிகர்களின் கோபத்திற்குள்ளாகி இருக்கிறார்.

அதாவது ‘பழைய வண்ணாரப்பேட்டை’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் தான் மோகன். இவர் திரௌபதி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பெரும் பெயர் பெற்றார்.

தற்போது மோகன் மற்றும் தல அஜித்தின் மச்சானான ரிச்சர்ட் இணைந்து ‘ருத்ர தாண்டவம்’ எனும் படத்தை எடுக்க உள்ளனராம்.

இவ்வாறிருக்க, மோகன் தற்போது அவருடைய ட்விட்டர் பக்கத்தில், ‘விக்ரம்’ படத்தின் மோஷன் வீடியோவை பகிர்ந்து, ‘சில்லறைய  சிதரவிட்டது  தப்பா போச்சே’ என பதிவிட்டிருக்கிறார்.

அதற்கு கமலின் தீவிர ரசிகர் ஒருவர், ‘எவ்வளவு சில்லறைய சிதறவிட்டாலும் காப்பி அடிச்சு கூட உன்னால இவ்வளவு குவாலிட்டியா டீசர் எடுக்க முடியாது டா’  என்று கழுவி ஊத்தியுள்ளார்.

இதற்கு மோகன், ‘குவாலிட்டி வச்சு ஒன்னும் பண்ண முடியாது. படைப்பு மக்களுக்கானது.. இந்த மாற்றமே எனக்கு போதும்’ என பதிலளித்திருக்கிறார்.

எனவே, இவ்வாறு திரையுலகமே வியந்து பார்க்கும் கமலஹாசனின் படத்தை சினிமா துறையில் உள்ள மற்றொரு நபர் கலாய்த்து இருப்பது, திரைத் துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

Continue Reading
To Top