Connect with us
Cinemapettai

Cinemapettai

mohan

Tamil Cinema News | சினிமா செய்திகள்

10 கோடி லாபம் கிடைத்தும் இவ்வளவுதான் கொடுப்பீங்களா என திட்டிய ரசிகர்.. கடுப்பில் வார்த்தையை விட்ட திரௌபதி இயக்குனர்

சமீபத்தில் நாடக காதலை மையப்படுத்தி வெளிவந்த திரௌபதி படத்தை இயக்கியவர் மோகன். இந்த படம் மூன்று வாரங்கள் தான் திரையரங்கில் ஓடினாலும் கிட்டதட்ட பத்து கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

அதற்கு காரணம் சாதி ரீதியாக இவர்கள் கிளப்பிய பிரச்சனையே. இந்த காலத்தில் சாதி மதம் பார்க்கவில்லை என்று கூறிக்கொண்டே இருந்தாலும் இந்த படத்தின் வெற்றி தமிழ்நாட்டில் சாதிகளுக்கு இன்னும் முக்கியத்துவம் உள்ளது என்பதைக் காட்டியுள்ளது.

இந்நிலையில் தற்போது நாடே ஒரு பிரச்சனையில் சிக்கி உள்ளது. இதனால் சாலைகளில் வசிக்கும் வீடுகள் அற்ற மக்களுக்கு டிரஸ்ட் சார்பில் உணவளித்து வருகின்றனர். அந்த ட்ரஸ்டுக்கு மோகன் சுமார் பத்தாயிரம் கொடுத்துள்ளார்.

பிறகு 20 ஆயிரம் பணம் தேவை என மக்களிடம் கோரிக்கை வைத்துள்ளார். அதற்கு ரசிகர் ஒருவர், திரௌபதி படம் பத்து கோடி வசூல் செய்ததாக கூறினீர்கள். அதில் ஒரு கோடி ரூபாயை எடுத்துக் கொடுத்து விடலாமே என கிண்டல் செய்துள்ளார்.

tweet

tweet

இதில் காண்டான மோகன், உதவி செய்யும் மனப்பான்மை இல்லை என்றாலும் உதவி செய்பவர்களை கிண்டலடிக்கும் மனப்பான்மை நிறையவே உள்ளது என்றும், உதவி செய்யவில்லை என்றாலும் தயவுசெய்து உபத்திரவம் செய்ய வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதனால் அந்த ரசிகருக்கு பல பக்கங்களில் இருந்து எதிர்ப்புகள் வந்த வண்ணம் உள்ளன.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top