fbpx
Connect with us

Cinemapettai

திரௌபதி பட இயக்குனருடன் இணையும் சிம்பு.. அடுத்து கை வைக்கப்போகும் கதை களமே வேற மாதிரி

Tamil Cinema News | சினிமா செய்திகள்

திரௌபதி பட இயக்குனருடன் இணையும் சிம்பு.. அடுத்து கை வைக்கப்போகும் கதை களமே வேற மாதிரி

ஒன்றுமே இல்லாத படத்திற்கு எப்படி மார்க்கெட்டிங் செய்ய வேண்டும் என்பதை தெளிவாக செய்திருந்தார்கள் திரௌபதி படக்குழுவினர். மேல் ஜாதி மற்றும் கீழ் ஜாதி ஆகிய இரண்டை மட்டும் வைத்துக்கொண்டு சில உண்மைச் சம்பவங்களையும் சேர்த்து கோடிக்கணக்கில் வசூலை அள்ளிய படம் தான் திரௌபதி.

இந்த படம் வெளியீட்டுக்கு முன்னரே பல்வேறு வகையான சர்ச்சைகள் கிளம்பி இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டது. சென்சார் பிரச்சனைகளும் அதிகமாக படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே கூடிய ஏற்றது.

இதற்கிடையில் படம் வெளியான பிறகு கிட்டத்தட்ட 15 கோடி அளவுக்கு வசூல் செய்து சாதனை படைத்தது திரௌபதி. ஒரு கோடி ரூபாய் கூட முதலீடு இல்லாத படம் 15 கோடி அளவுக்கு வசூல் செய்து அனைத்து தரப்பினருக்கும் லாபத்தைக் கொடுத்தது.

இந்த படத்தினை அடுத்து இயக்குனர் மோகன் மீண்டும் ரிச்சர்ட் ரிஷி கூட்டணியில் அடுத்தப் படத்தை ஆரம்பிக்க இருப்பதாகவும், அந்தப் படத்திற்கும் கடவுளின் பெயரை தலைப்பாக வைத்த இருப்பதாகவும் சமீபத்தில் வெளியிட்டார்.

இந்நிலையில் சிம்பு ரசிகர் ஒருவர் மோகனிடம், சிம்புவை வைத்து படம் இயக்க வேண்டும் என்றும் அவர் தான் உண்மையான கருத்துக்களை எந்தவித ஒளிவுமறைவும் இல்லாமல் தெரிவிப்பார் என்றும் வேண்டுகோள் வைத்துள்ளார்.

tweet-mohan

tweet-mohan

அதற்கு மோகன், சிம்பு ரெடி என்றால் நானும் ரெடி என்றும், அடுத்த படத்தினை முடித்தபிறகு சிம்புவிடம் ஒரு கதை சொல்ல இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். சர்ச்சை இயக்குனர் மற்றும் சர்ச்சை நடிகராக இருவரும் இணைந்தால் தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top