fbpx
Connect with us

Cinemapettai

தமிழ் சினிமாவில் சரித்திரம் படைத்த திரௌபதி வசூல்.. இரண்டாம் பாகம் வருமா?

Tamil Nadu | தமிழ் நாடு

தமிழ் சினிமாவில் சரித்திரம் படைத்த திரௌபதி வசூல்.. இரண்டாம் பாகம் வருமா?

திரௌபதி படத்தின் முதல் நாள் குறித்த விவரம் வெளியாகி உள்ளது. இயக்குநர் மோகன் இயக்கியிருக்கும் இப்படத்தில் நடிகை ஷாலினியின் அண்ணனான ரிச்சர்ட் ரிஷி ஹீரோவாக நடித்திருக்கிறார்.

இதேபோல் நடிகை ஷீலா திரௌபதியாக லீடிங் ரோலில் நடித்திருக்கிறார். கருணாஸ், இளங்கோ, நிஷாந்த், கோபி உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். படம் பெரும் எதிர்ப்பு மற்றும் எதிர்பார்ப்புக்கு இடையில் வெள்ளிக்கிழமை வெளியானது. தமிழகம் முழுவதும் 330 தியேட்டர்களில் திரௌபதி படம் வெளியாகி உள்ளது.

இப்படத்திற்கு பா.ஜ.க தேசிய செயலாளர் எச் ராஜா, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரிவித்தனர். இதனால் பாமக நிர்வாகிகள் பலரும் குடும்பத்தினருடன் நேரில் சென்று பார்த்தார்.

பல்வேறு மாவட்டங்களில் திரௌபதி படம் ரிலீஸான தியேட்டர்கள் விழாக்கோலம் பூண்டன. தாரை தப்பட்டைகள், ட்ரம்ஸ், மேள தாளங்கள் முழங்க படம் விமரிசையாக ரிலீஸ் செய்யப்பட்டது. பெரும்பாலான வட மாவட்டங்களில், கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளில் இருந்தும் குடும்பம் குடும்பமாய் படத்திற்கு செல்கிறார்கள்.

திரௌபதி படம் மொத்தமே 50 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டது. இந்நிலையில் ரிலீஸான முதல் நாளிலேயே திரௌபதி படம் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை படத்தின் இயக்குநரான மோகனும் உறுதிபடுத்தி உள்ளார்.

முதல் நாள் தமிழ்நாட்டில் மட்டும் 2.76 கோடி வசூல் செய்த நிலையில் இரண்டாவது நாளாக 2.18 கோடி வசூல் செய்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ரசிகர்களின் இந்த பெரும் ஆதரவை வைத்து மற்றும் படத்தின் இறுதி கட்டத்தில் திரௌபதியின் வேட்டை தொடரும் என்று முடிக்கின்றனர், இது இரண்டாம் பாகத்திற்கான அறிகுறி என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top