Tamil Cinema News | சினிமா செய்திகள்
திரெளபதி ஹீரோவை தூக்கிவிடும் தல அஜித்.. இது எங்க போயி முடியபோகுதோ
தமிழ் சினிமாவில் ஜாதியை மையப்படுத்தி அழுத்தமான கதைகளை வெளிக்கொண்டு வருவது கடினம் தான். ஆனால் அதை தற்போது திரௌபதி திரைப்படம் தகர்த்தெரிந்து உள்ளது. கடந்த வாரம் வெளிவந்து தற்போது வரை ரசிகர்களிடையே நல்ல கைதட்டல் மற்றும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
ஜி மோகன் இயக்கத்தில் அஜித்குமாரின் மைத்துனன் ரிச்சர்ட் நடித்துள்ள இந்த படம் வசூல் ரீதியில் வெற்றி அடைந்துள்ளது. இந்த படம் வெளிவருவதற்கு முன்னதாக ரிச்சர்ட் கொடுத்துள்ள பேட்டியில் திரௌபதி மட்டுமல்லாமல் இன்னும் ஐந்து ஸ்கிரிப்ட்டை அடுத்தடுத்து உள்ளதாகவும் இதே இயக்குனருடன் பயணிக்க போவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த யோசனையை தல அஜித் அறிவுரையாக கூறியுள்ளார் இந்த செய்தி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்று வருகிறது.
இதேபோல்தான் தல அஜித் இயக்குனர் சிறுத்தை சிவாவுடன் இணைந்து வேதாளம், விவேகம், வீரம், விஸ்வாசம் என தொடர்ந்து 4 படங்களை வெளியிட்டன என்பது குறிப்பிடத்தக்கது. தல அஜித்தின் பாலிசியை பின்பற்றுவதாக ரிச்சர்ட் கூறியிருப்பது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.
ரிச்சர்ட் மற்றும் இயக்குனர் ஜி மோகனின் கெமிஸ்ட்ரி சிறப்பாக இருப்பதால் இது கண்டிப்பாக நடக்கும் என்று தெரிவித்துள்ளனர். 3 வருடங்களுக்கு முன்பு நடந்த உண்மை சம்பவத்தை மையமாக எழுதப்பட்ட கதைதான் திரௌபதி ஆனால் தற்போது ஒரு சில நிகழ்வுகளுடன் ஒத்துப்போவதால் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதாக அவர் கூறியிருக்கிறார்.
என்னதான் தல அஜித்தின் மைத்துனன் ஆக இருந்தாலும் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து விட வேண்டும் என்ற ரிச்சர்டின் கனவு நினைவாகி விட்டது என்றே கூறலாம். இதே இயக்குனருடன் பழைய வண்ணாரப்பேட்டை என்ற படம் நடித்துள்ளார் குறிப்பிடத்தக்கது.
