Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

திரௌபதி இயக்குனரின் அடுத்த படத்திற்கு இவர்தான் ஹீரோ.. ஒரு முடிவோடதான் இருக்காங்க போல

பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஜி.மோகன். சில தினங்களுக்கு முன்பு வெளிவந்த திரௌபதி திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டுமல்லாமல் வசூல் ரீதியாக பல மடங்கு அள்ளியது என்று தான் கூற வேண்டும்.

அதாவது தற்போது வரை 18 கோடி வசூல் செய்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  ஆனாலும் திரௌபதி என்பது தமிழ் கடவுளின் பெயர் என்பதால் சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியைத் தொடர்ந்து ஏற்கனவே படக்குழுவினர் தெரிவித்தபடி அடுத்த படத்தின் அப்டேட் வெளிவந்துள்ளது.

திரௌபதி படத்தின் ஹீரோ மற்றும் ஷாலினியின் அண்ணனான ரிச்சர்ட் ரிசி இதனை அதிகாரப்பூர்வமாக பதிவிட்டுள்ளார். திரௌபதி படம் வெளி வருவதற்கு முன்னதாகவே இயக்குனர் 5 ஸ்கிரிப்ட்களை வைத்திருப்பதாகவும் அடுத்தடுத்து இவருடன் மட்டுமே படம்  இணையப் போவதாக தெரிவித்திருந்தார்.

அதன்படி தற்போது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் என்பதை அடித்தளமாக வைத்து படப்பிடிப்பு தொடங்கி விட்டதாகவும் படத்தின் தலைப்பு விரைவில் வெளிவரும் என்று தெரிவித்துள்ளார். அதாவது இந்தப்படமும் ஜாதியை மறைமுகமாக வைத்து எடுக்கப்பட்ட திரௌபதி படத்தைப்போல் ஒரு எழுச்சியை உண்டாகும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

richard

richard

ஏனென்றால் திடீர் திடீரென்று மத்திய மாநில அரசுகள் வெளிக்கொண்டுவரும் சட்டத்தினால் மக்கள் எவ்வளவு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை வெளிப்படுத்தும் விதமாக இந்த படம் இருக்குமாம்.

ரிச்சர்ட் ரிசி மற்றும் ஜி மோகனுக்கும் இடையிலான கெமிஸ்ட்ரி அமோகமாக இருப்பதால் கண்டிப்பாக தமிழ் சினிமாவில் இந்த படமும் சரித்திரம் படைக்கும் என்பதில் சந்தேகமும் இல்லை.

தல அஜித் இயக்குனர் சிவாவுடன் இணைந்து அடுத்தடுத்து படங்களை வெளியிட்டது போல ரிச்சர்ட் ரிசி தற்போது மோகனுடன் இணைந்து அடுத்தடுத்து படங்களை வெளியிடுவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சிதான்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top