Tamil Cinema News | சினிமா செய்திகள்
திரௌபதி பட இயக்குனரை நேரில் சந்தித்து வாழ்த்தினாரா அஜித்? வைரல் போட்டோவின் பின்னணி என்ன
பழைய வண்ணாரப்பேட்டை படத்தை இயக்கிய ஜி. மோகன் இயக்கியுள்ள படம் ‘திரௌபதி’. ரிஷி ரிச்சார்டு, ஷீலா, கருனாஸ், நிஷாந்த், சவுந்தர்யா, லீனா, சேஷு, ஆறு பாலா, ஜீவா ரவி, இளங்கோ, கோபிநாத், சுப்ரமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் நாடகக் காதல்களை தோலுரிக்கும் என்ற வகையில் வெளியான ட்ரைலர் சுமார் 4 மில்லியன் வியூஸ் கடந்துள்ளது யூ ட்யூபில். குறிப்பிட்ட சமூகத்திற்கு ஆதரவாக சிலர் படமெடுக்க, அவர்களின் கோட்பாடை வேறுவிதமாக சித்தரிப்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இப்படத்தில் நடித்துள்ள ரிஷி ரிச்சர்ட், ஷாலினி அவர்களின் அண்ணன். இந்நிலையில் ட்விட்டரில் பட ட்ரைலரை அஜித் பார்த்து, இயக்குனரை அழைத்து பாராட்டினார்; தனது ஆதரவையும் சொன்னதாக செய்திகள் வெளியாகின.
இது வெறும் வதந்தி தான். அது சில பல வருடங்களுக்கு முன் க்ளிக்கிய போட்டோ. சினிமா உலகமும், அஜித் ரசிகர்களும் குழம்பி விட கூடாதென, ட்விட்டரில் ஸ்டேட்டஸ் தட்டியுள்ளார் இயக்குனர்.
வதந்திகளை நம்பாதீர்.. #திரெளபதி குறித்து தல எனக்கு எந்த வாழ்த்தையும் தெரிவிக்கவில்லை.. உலவும் புகைப்படம் ஐந்து வருடங்களுக்கு முன் ஒரு ரசிகராக அவருடன் எடுத்தது மட்டுமே
— Mohan G Kshatriyan (@mohandreamer) January 13, 2020
