vishal ayyokiya
vishal ayyokiya

சர்ச்சையில் சிக்கிய விஷால்

நடிகர் விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான அயோக்கியா  படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பல சர்ச்சைகளை சந்தித்துள்ளது. நடிகர் விஷால் சமீபத்தில் வெளியான இரும்புத்திரை படம் நல்ல வெற்றி அவருக்கு தேடிக்கொடுத்தது. இப்படி இருக்கும் நிலையில் இந்த மாதிரியான சர்ச்சைக்குரிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை வெளியானது பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இவர் தயாரிப்பாளர் சங்கத்தில் முக்கிய பதவியில் உள்ளார். இவருக்கு இந்த மாதிரியான பிரச்சினைகள் வந்துள்ளது பலபேருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் தமிழ்த்திரையின் ஸ்டார் ஆக இருக்கும் விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சமீபத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதே போல் ராமதாஸ் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் சங்க பொதுச் செயலாளர் என்ற முறையில் புகைக்கும் காட்சிகளை நடிகர்கள் நடிப்பதை தடைசெய்ய வேண்டுமென கடிதம் எழுதினேன். இப்பொழுது புகையை தாண்டி பீர் பாட்டிலுடன் நடிக்கிறார். என்ன ஒரு சமூக பொறுப்பு என கிண்டல் செய்துள்ளார்.

அதிகம் படித்தவை:  விஷால், சன்னி லியோன் கவர்ச்சி குத்தாட்டம்.. அட அரசியல் வேற சினிமா வேறப்பா..