வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

டம்மி வேட்பாளர்கள் போட்டு துட்டு பார்க்கும் சீமான்.. அடி மேல அடி விழுதே!

Seeman: நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானுக்கு ஏதோ கெட்ட நேரம் வேலை செய்கிறது போல. தொடர்ந்து அவரைப் பற்றி வெளியாகும் செய்திகள் எதுவுமே விரும்ப தகும் வகையில் இல்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கட்சியின் நிர்வாகிகள் பற்றி சீமான் தரம் தாழ்ந்து பேசியதாக ஆடியோ ஒன்று வைரலானது.

அதை தொடர்ந்து கடந்த மாதம் தொடக்கத்திலிருந்து நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் அந்த கட்சியில் இருந்து விலகி இருக்கிறார்கள். உள்ளே இருக்கும் சீனியர் நிர்வாகிகளும் ஒரு சில நிபந்தனைகளை சொல்லி அதை சீமான் ஏற்றுக் கொண்டால் மட்டும் தான் கட்சியில் தொடர்வோம் என அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அடி மேல அடி விழுதே!

இது எதற்குமே பதில் சொல்லாமல் சம்பந்தமே இல்லாமல் நடிகர் விஜய் மற்றும் அவருடைய கட்சிக் கொள்கை பற்றி தரம் தாழ்ந்து நிறைய விமர்சனங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார் சீமான். விஜய் தன்னுடன் வந்து இணைவார் என்று நினைத்து பின்னர் அதற்கு வாய்ப்பே இல்லை என்ற தெரிந்த பின்னாடி வெளிவரும் ஏமாற்றம்தான் இது.

நாம் தமிழர் கட்சி தமிழக அரசியலில் வளர்ந்து வரும் கட்சியாக இருக்கும் சூழ்நிலையில் இப்படி ஒரு பெரிய அடி சீமானுக்கு விழுந்திருக்கிறது. போதாத குறைக்கு மருத்துவர் இளவஞ்சி நேற்று புதிய தலைமுறை சேனலுக்கு பேட்டி ஒன்றை கொடுத்திருக்கிறார்.

அதில் சீமான் கட்சியை வைத்து பிசினஸ் செய்வது போல் பேசி இருக்கிறார். அதாவது சீமான் ஒவ்வொரு தொகுதியிலும் நிறுத்துவது டம்மி வேட்பாளர்களை தான். மற்ற கட்சி வேட்பாளர்கள் தாங்கள் ஜெயிக்க வேண்டும் என பணம் கொடுக்கிறார்கள்.

ஆனால் இந்த டம்மி வேட்பாளர்கள் தோற்பதற்கு என்று பணம் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். இதைத்தான் சீமான் தொடர்ந்து செய்து வருகிறார் இதனால் கட்சி நிர்வாகிகளுக்கு அதிருப்தி இருப்பதாக இளவஞ்சி மனம் திறந்து பேசி இருக்கிறார். தற்போது இந்த வீடியோ பெரிய அளவில் வைரல் ஆகி வருகிறது.

- Advertisement -

Trending News