fbpx
Connect with us

Cinemapettai

ரஜினிக்கு என்றால் ரத்தம், நிழல்கள் ரவிக்கு என்றால் தக்காளி சட்னியா ? கோமாளி ட்ரைலர் சர்ச்சை விவகாரம் – ஒரு அலசல் பார்வை.

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ரஜினிக்கு என்றால் ரத்தம், நிழல்கள் ரவிக்கு என்றால் தக்காளி சட்னியா ? கோமாளி ட்ரைலர் சர்ச்சை விவகாரம் – ஒரு அலசல் பார்வை.

ஜெயம் ரவி நடிப்பில் வேல்ஸ் பிலிம் இன்டெர்னஷ்னல், ஐசரி கணேஷ் தயாரிப்பில் பிரதீப் ரங்கநாதன் இயக்கியுள்ள படம் கோமாளி. 16 வருடங்களாக கோமாவில் இருந்தவன் முழித்து எழ, அவன் படும் பாடு தான் ட்ரைலர் ஆக வெளியானது.

எனினும் ரஜினி அரசியலுக்கு வருவதாக கடந்த 1996ம் ஆண்டு முதல் சொல்லிவருவதாக, கேலி செய்த காட்சி சில தரப்பின் எதிர்ப்பை சம்பாரித்தது. கமல் கூட அந்தக்காட்சிக்காக வருத்தப்பட்டார். ரஜினி ரசிகர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மற்றும்  இயக்கநர் பிரதீப் ரங்கநாதன் இருவரும் மன்னிப்பு கோரி காட்சியை நீக்குவதாக அறிவித்தார்கள். ஜெயம் ரவி கூட தன் ட்விட்டரில் விளக்கத்தையும், அந்த காட்சியை நீக்குவது பற்றியும் தெரிவித்தார்.

மேலும் ரஜினிகாந்த் அவர்களே இவரக்ளின் கான்செப்ட் மற்றும் தனித்துவ சிந்தனையை பாராட்டியதாகவும் சொல்லியுள்ளார் என்ற தகவலையும் அதில் பகிர்ந்துள்ளனர்.

அந்த ட்ரைலரில் யோகி பாபு பேசும் இன்னொரு வசனம் உண்டு, “என்னடா ஜெயம் ரவி மாதிரி வருவேன்னு பார்த்தா, நிழல்கள் ரவி மாதிரி வந்து நிக்கிற.” ரஜினி அரசியல் பிரவேசத்தை கிண்டல் செய்வது தவறு என்றால், இன்றைய தேதிக்கு நிழல்கள் ரவி அவர்களை கிண்டல் செய்வது நியாயம் ஆகி விடுமா ? தவறு என்றால் இரண்டுமே தவறு, சரி என்றால் இரண்டுமே சரி தான்.

சினிமா என்பது ஒரு படைப்பு, அதனை எடுக்க  சுதந்திரம் வேண்டும். அந்த துறையில் உள்ளவர்களே சிலவற்றை பெரிது படுத்தாமல் பெருந்தன்மையாக தான் உள்ளனர். ஆனால் வேறு சிலரோ அதனை பெரிது படுத்துகின்றனர். சில சமயம் அது படத்துக்கு பிரீ பப்லிசிட்டி ஆகிறது சில சமயம் எதிர் மறை ஆகிறது.

தங்களின் படத்தின் வியாபாரம் பாதிப்படைய கூடாது என ரஜினி  தரப்பிடம் மன்னிப்பு கேட்டு, முடிந்துவிட்டது கோமாளி படக்குழு. எனினும் இங்கு உண்மையான “கோமாளி யார்” என்பதனை யோசிக்க வேண்டிய சூழலில் தான் நாம் உள்ளோம்.

சினிமாபேட்டை கமெண்ட்ஸ் – கருத்து சுதந்திரம் அனைவருக்கும் உண்டு.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top