fbpx
Connect with us

Cinemapettai

இரட்டை இலை சின்னம் பெற டி.டி.வி.தினகரன் லஞ்சம் கொடுத்த விவகாரம்: ஆனந்தராஜ் பரபரப்பு பேட்டி

Anandraj-Double-Leaf-TTV-Dinakaran

News | செய்திகள்

இரட்டை இலை சின்னம் பெற டி.டி.வி.தினகரன் லஞ்சம் கொடுத்த விவகாரம்: ஆனந்தராஜ் பரபரப்பு பேட்டி

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுத்த விவகாரத்தில் டி.டி.வி.தினகரன் அளித்த பதிலே சாட்சியாக அமைந்து விட்டது என்று கோவையில் நடிகர் ஆனந்தராஜ் கூறினார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டு சென்னை திரும்புவதற்காக நடிகர் ஆனந்தராஜ் கோவை விமான நிலையத்துக்கு வந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

சாட்சியாக அமைந்து விட்டது

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக லஞ்சம் கொடுத்த விவகாரத்தில், ஒரு நாளைக்கு பலபேர் எனக்கு தொடர்பு கொண்டு பேசுவார்கள். அதில் யாராவது இந்த வேலையை செய்வேன் என்று சொல்லியிருப்பார்கள். முடிந்தால் இதை செய்யுங்கள் என்று நான் சொல்லியிருப்பேன் என்று டி.டி.வி. தினகரன் பதில் கூறி உள்ளார். இதனால் அவர் அளித்த பதிலே சாட்சியாக அமைந்து விட்டது.

ஒரு தொகுதிக்கு பல கோடி ரூபாயை செலவு செய்ததை தேர்தல் ஆணையம் கண்டுபிடித்து அந்த தொகுதி தேர்தலை ரத்து செய்து இருக்கிறது. பல கோடி ரூபாயை கொடுத்து உரிமையை பெறுகிற எண்ணத்தில் இருக்கிற குடும்பத்தை சார்ந்தவர்கள், கட்சியில் உண்மையாக உழைத்த, மூத்த நிர்வாகிக ளுக்கு இதுபோன்று செலவு செய்வார்களா?. இந்த பணம் அனைத்தும் அவர்களுக்கு எங்கே இருந்து வந்தது? என்பதை அனைவரும் நினைத்து பார்க்க வேண்டும்.

நிரூபிக்க வேண்டும்

கொங்கு மண்டலம் தான் ஜெயலலிதாவுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. தற்போது முதல்– அமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியும் கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர் தான். கட்சியில் எம்.எல்.ஏ.க்களாக கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர்கள் தான் அதிகம் உள்ளனர்.

தற்போது கட்சியில் இருக்கும் சூழ்நிலையை பார்த்து இந்த பகுதியை சேர்ந்தவர்கள் வருத்தப்படுகிறார்கள். அவர்களின் வருத்தத்தை போக்கும் கடமை மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டவர்களுக்கு இருக் கிறது. எனவே இங்குள்ள எம்.எல்.ஏ.க்கள் நல்ல முடிவு எடுத்து, கட்சி வேறு, குடும்பம் வேறு என்பதை நிரூபிக்க வேண்டும்.

முதல்–அமைச்சர் போராட வேண்டும்

டெல்லியில் தமிழக விவசாயிகள் பல நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால் அந்த போராட்டத்தை யாரும் கண்டுகொள்ளவில்லை. இந்த வி‌ஷயத்தில் எதிர்கட்சியான தி.மு.க. அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி உள்ளது. ஆளும்கட்சி செய்ய வேண்டியதை தி.மு.க. செய்து உள்ளது. எனவே விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற வேண்டுமானால் தமிழக மக்களின் பிரதிநிதியாக இருக்கும் தமிழக முதல்–அமைச்சர் போராட்டகளத்துக்கு சென்று விவசாயிகளுடன் இணைந்து போராட வேண்டும்.

விவசாயிகளுக்கு ஆதரவாக போராடுபவர்கள் சட்டத்தை தன் கையில் எடுத்து விடக்கூடாது. போராட அனைவருக்கும் உரிமை இருக்கிறது. ஆனால் போராட்ட விதம் எப்படி இருக்கிறது என்பதை நினைத்து பார்க்க வேண்டும். சென்னையில் கத்திப்பாரா பாலத்தை பூட்டுப் போட்டதால், பொதுமக்கள் பலர் பாதிக்கப்பட்டனர். இது போன்று மக்களுக்கு துன்பம் கொடுக்கும் வகையில் போராடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மக்களின் கருத்து

இந்த ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தல் வைக்க வேண்டும் என்பது தான் மக்களின் கருத்து. எனவே மக்களின் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும். கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்று சேர்ப்ப தாக தற்போது பேசப்பட்டு வருகிறது. எனவே இந்த வி‌ஷயத்தில் ஓ.பன்னீர்செல்வம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top