இரும்புத்திரை வெற்றிக்குப் பிறகு ஆக்‌ஷன் கிங் அர்ஜூன், அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

arjun

ஆக்‌ஷன் கிங் என்று அழைக்கப்படும் அர்ஜுன், 50 வயதை நெருங்கும் நிலையிலும் உடலை ஃபிட்டாக வைத்திருக்கிறார். ஹீரோவாக 15 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வரும் அவர், அஜித்துடன் இணைந்து மங்காத்தா படத்தில் புதிய அவதாரம் எடுத்தார். இதன்மூலம் மல்டி ஹீரோ சப்ஜெட்டுகளில் வலம்வரத் தொடங்கிய அர்ஜூன், சமீபத்தில் தனது சிஷ்யர் விஷாலின் இரும்புத் திரை படத்தில் வில்லனாகக் கலக்கினார். சைபர் திரில்லர் வகைப் படமான இரும்புத் திரை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்தநிலையில், விஜய் ஆண்டனியின் அடுத்த படத்தில் முக்கியமான ரோலில் நடிக்க அர்ஜூன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். லீலை படத்தை இயக்கிய ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கும் அந்த படத்துக்கு கொலைகாரன் என்று பெயரிடப்பட்டுள்ளது. இரும்புத்திரை படத்தைப் போலவே இந்த படத்திலும் அர்ஜூனுக்கு வில்லன் வேடம் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால், அந்த தகவல்களில் உண்மையில்லை என்று மறுத்துள்ள கொலைகாரன் படக்குழு, அர்ஜூன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கத்தான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று எதைவைத்து தகவல் பரப்புகிறார்கள் என்று தெரியவில்லை. படத்தில் அவருக்கு முக்கியமான கேரக்டர்.

arjun

அவரது கேரக்டர் படத்தில் திருப்புமுனையாக அமையும் என்கிறார்கள். திரில்லர் வகையில் படமாக்கப்பட உள்ள கொலைகாரனில் ஆக்‌ஷன் கிங் அர்ஜூனுக்கு வெயிட்டான ரோல் என்றும் சொல்கிறார்கள்.
இந்த படத்துக்கு விஜய் ஆண்டனியே இசையமைக்க இருக்கிறார். மேலும், பிஎஸ் வினோத்திடம் அசோசியேட்டாக பணிபுரிந்த முகேஷ் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். விக்ரம் வேதா படத்தில் பணிபுரிந்த கலை இயக்குநர், எடிட்டர் என பெரும்பாலான டெக்னீஷியன்கள் இந்த படத்திற்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்கள். வரும் ஜூன் மாதம் ஷூட்டிங் தொடங்க படக்குழு திட்டமிட்டிருக்கிறது.