அஜீத்தின் விவேகம் விமர்சனம் கடந்த சில வாரங்களாகவே உர்ரென இருக்கும் அவர், சிவாவை அழைத்து “கவலைப்படாதீங்க” என்று கூறியனுப்பியதெல்லாம் நாம் ஏற்கனவே வெளியிட்ட செய்திதான். அதற்கப்புறம் நடந்த இன்னொரு முக்கிய தகவல் இது.

ajith vivegam recordசூர்யாவை வைத்து ஒரு படத்தை இயக்கிய டைரக்டர் அவர். அந்தப்படத்தில் சூர்யாவை விட்டுவிட்டு இவரைதான் ஓட்டு ஓட்டென ஓட்டினார்கள் ரசிகர்கள். ‘யப்பா ஆள விடுங்கடா’ என்று கெஞ்சுகிற அளவுக்கு இந்த டைரக்டர் விரட்டப்பட்டார். ஆனால் அதே படத்தை தானே ரிலீஸ் செய்த விதத்தில் பெரும் கடனாளி ஆன அவர் அதற்கப்புறம் மீண்டு வருவதற்குள், போதும் போதும்னு ஆச்சாம்..

Siva-and-ajithஅவர்தான் சிவாவுக்கு போன் அடித்தாராம். “சிவா… அஜீத் கூப்பிட்டு மறுபடியும் படம் தர்றேன்னு சொல்லியிருப்பார். அதில் உண்மை கூட இருக்கலாம். ஆனால் நீங்க அதுக்காக காத்திருந்தீங்கன்னா, அதுவே உங்களுக்கு சிக்கலாகிவிடும். ஏன்னா… சூர்யாவும் என்னை கூப்பிட்டு இப்படிதான் சொன்னார். கால்ஷீட் கொடுப்பாருன்னு காத்திருந்து காத்திருந்து மூணு வருஷம் ஓடிப்போச்சு”.

“அதனால் உடனே ஒரு சின்ன ஹீரோவை வச்சு ஒரு படத்தை இயக்கிடுங்க. அதுதான் உங்களை மீட்டு எடுக்கறதுக்கான ஒரே வழி” என்றாராம்.