ஹாலிவுட் படங்களின் படப்பிற்காக அமெரிக்க சென்றிருந்தபோது ஹாலிவுட் தயாரிப்பாளர் ஒருவர் ஐஸ்வர்யராயிடம் தவறாக நடக்க முயன்ற தகவல் ஒன்றை அவரது மேலாளர் சிம்ஓன் ஷிப்ல்டு வெளியிட்டுள்ளார்.

Aishwarya Rai
Aishwarya Rai

இந்த செய்தி ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.மேலும்

திரைப்பட விழாக்களில் நடிகைகள் மாடர்ன் உடைகளில் வரும்போது சில சமயம் எதிர்பாராத விதமாக ஆடை நழுவும் சம்பவங்கள் நடப்பதுண்டு.

அதுபோன்ற தருணத்தை படம் பிடித்து இணைய தளத்தில் வெளியிட்டு வைரலாக்கும் நோக்கத்துடன் சில புகைப்பட கலைஞர்கள் காத்திருப்பது உண்டு.

பாலிவுட்டில் இதற்காக ஸ்பெஷல் டீமே பணியாற்றுகிறது. இணைய தள பட்டனை தட்டிவிட்டால் இதுபோல் எக்கச்சக்கமான கவர்ச்சி படங்கள் வரிசை கட்டுகிறது.

Aishwarya Rai

சமீபத்தில் மும்பையில் பிரபல டிசைனர் ஒருவரின் வீட்டில் நடக்கும் பார்ட்டியில் பங்கேற்க ஐஸ்வர்யாராயை அழைத்துக்கொண்டு காரில் வந்தார் கணவர் அபிஷேக் பச்சன்.

ஐஸ்வர்யாராய் வருவதை கண்டவுடன் புகைப்பட கலைஞர்கள் வேகமாக ஓடி வந்து அவர் இறங்கும் போது கால்களை மட்டும் படம் பிடிக்க தயாராக இருந்தனர்.

அதைக்கண்டு ஐஸ்வர்யாராய் தயக்கத்துடன் காரிலேயே அமர்ந்திருந்தார். அவரது தர்மசங்கடத்தை புரிந்துகொண்ட அபிஷேக்பச்சன் கோபம் அடைந்தார்.

abhishek-bacchan

கார் அருகே காத்திருந்த புகைப்பட கலைஞர்களை அழைத்து, ‘நீங்கள் இதுபோல் செய்வது சரியில்லை. ஐஸ்வர்யாராயின் அழகு கால்களை படமெடுக்க காத்திருக்கிறீர்களா.

அது தவறு. விருப்பமில்லாத இதுபோன்ற படங்களை எடுக்காதீர்கள். அப்படி ஏதாவது எடுத்திருந்தால் உடனே ெடலிட் செய்துவிடுங்கள்’ என்று பாய்ந்தார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.