உலகில் வாழும் உயிர்கள் ஒவ்வொன்றும் வேறுபாடு நிறைந்தவை, இதில் மனிதன் மட்டும் மீதம் இருக்கும் அனைத்து உயிர்களையும் அடக்கி ஆளும் குணம் கொண்டவன். இந்த மனிதரிலும் பல வகை அவற்றில் ஆண்களுக்குப் பிடித்த ஒருசில செயல்கள் பெண்களுக்குப் பிடிக்காது, பெண்களுக்குப் பிடித்த செயல்கள் ஆண்களுக்குப் பிடிக்காது.

ஆனால் திருமணம் அல்லது காதல் செய்துவிட்டால், ஒருசிலவற்றை பொறுத்துக் கொண்டு தான் செல்ல வேண்டும். அவ்வாறு நடந்தால் தான், வாழ்க்கை நன்கு சுமுகமாக செல்லும். சரி, இப்போது ஆண்களுக்கு மிகவும் பிடிக்கும், ஆனால் பெண்களுக்கு பிடிக்காத செயல்களில் சிலவற்றை பட்டியலிட்டுள்ளோம். உண்மை என்னவென்றால், இத்தகைய செயல்களை பெரும்பாலான ஆண்கள் செய்து வருகின்றனர்.

போர்களமாக காட்சியளிக்கும் பெட்ரூம்,

ஆண்களின் செயல்களில் மிகவும் மோசமானது என்றால், அது வீட்டை அசுத்தமாக வைத்துக் கொள்வது தான். அவர்கள் எப்போதுமே தங்கள் அறைகளை ஒரு குப்பை போன்று தான் வைத்திருப்பார்கள். அதிலும் எந்த ஒரு பொருளும் இருக்க வேண்டிய இடத்தில் இருக்காது. ஆனால் பெண்களுக்கு எப்போதும் சுத்தத்துடன் இருக்க வேண்டும். ஆகவே இத்தகைய மோசமான சூழ்நிலையைப் பார்த்தவுடன், அவர்கள் கோபமடைந்து சண்டைப் போடுகின்றனர். பெரும்பாலான வீடுகளில் இந்த ஒரு காரணத்திற்காகவே பெண்கள் ஆண்களுடன் சண்டை போடுகின்றனர்.

அதிகம் படித்தவை:  இத்தனை நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளாரா அஜித்! ஸ்பெஷல்

ஷேவிங் செய்யாத சோம்பேறி,

சரியாக ஷேவிங் செய்யாமல் இருப்பது. அதுவும் வாரக்கணக்கில் சிலர் ஷேவிங் செய்ய மாட்டார்கள். ஏனெனில் அதைச் செய்வதற்கு சோம்பேறித்தனம் என்பதாலேயே தான். அதுமட்டுமின்றி, அவர்களது சோம்பேறித்தனத்தால், அவர்கள் அழுக்கு சட்டையை கூட இரண்டு நாட்கள் போடுவார்கள். மேலும் எங்காவது வெளியே சென்றுவிட்டு, வீட்டிற்கு வந்தால், உடனே முகம், கை, கால் கழுவாமல், அப்படியே நீண்ட நேரம் உட்கார்ந்து நேரத்தை வீணாக்குவதைப் பார்த்தாலும், பெண்களுக்கு பிடிக்காது.

தூங்குமூஞ்சு,

நிறைய ஆண்கள் தூங்குவதை விரும்புவார்கள். அதிலும் தனிமையில் மனைவி அருகில் இருந்தால் கூட, அதனைப் பொருட்படுத்தாமல், தூங்குவதையே நோக்கமாக வைத்துக் கொண்டு தூங்குவார்கள். இதில் கொடுமை என்னவென்றால், வார இறுதியில் விடுமுறை நாட்களில் மனைவி அல்லது காதலியுடன் நேரத்தை சிறிது நேரம் செலவழிக்காமல், தூங்கிக் கொண்டிருப்பது தான்.

ஈகோவா ரோமேன்சா?

பொதுவாக ஒருசில ஆண்கள் அவர்களது ஈகோவினால், ரொமான்ஸை சரியான நேரத்தில் வெளிப்படுத்தமாட்டார்கள். ஆகவே பெண்கள் அதனை தாங்காமல், அவர்களே வெளிப்படுத்தி விடுகிறார்கள்.

உதாரணமாக, பெண்கள் அடிக்கடி ஐ லவ் யூ என்று சொன்னால், ஆண்கள் அதனை மீண்டும் சொல்ல பல மாதங்கள அல்லது வருடங்கள் கூட ஆகும்.

அதிகம் படித்தவை:  கட்டிங்குக்கு ரெடியா - ரசிகர்களிடம் கேட்ட ஓவியா ! 90 மில்லி பட புதிய போஸ்டர்கள் உள்ளே !

கிரிக்கெட் பைத்தியங்கள்,

ஆண்கள் அனைவருக்குமே கிரிக்கெட் என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் பெண்களுக்கு அறவே பிடிக்காது. ஏனெனில் பெண்கள் நன்கு அழகாக கண்ணைக் கவரும் வகையில் உடை அணிந்து கொண்டு வந்து, கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருக்கும் ஆண்களிடம் காண்பித்தால், அந்த நேரத்தில் உடுத்திய ஆடையை கவனிக்காமல், டிவியை வாயை திறந்து பார்த்துக் கொண்டிருப்பதால், பெண்களுக்கு கிரிக்கெட் பிடித்தாலும், பிடிக்காமலே போய்விடுகிறது.

பொழுதுபோக்கிலே கவனம்,

நிறைய தம்பதியர்கள் சண்டை போடுவதற்கு காரணம், வீடியோ கேம்ஸ் தான். ஏனெனில் ஆண்கள் பலர் தங்கள் நேரத்தை செலவழிக்க வீடியோ கேம்ஸை விளையாடுவார்கள். அத்தகைய விளையாட்டை எப்போதாவது விளையாடினால் பரவாயில்லை. ஆனால் அதனையே எப்போதும் விளையாடிக் கொண்டிருந்தால், எப்படி பிடிக்கும்.

இரவில் புத்தகம்,

புத்தகம் படிப்பது பெண்களுக்கும் பிடித்த விஷயம் தான். ஆனால் அதே புத்தகத்தை வீட்டில் காலை அல்லது மதிய வேளையில் படித்தால் போதாதா என்ன? ஆம், ஆண்கள் பெரும்பாலும் இரவில் படுக்கும் போது மனைவியுடன் பேசிக் கொண்டே தூங்காமல், புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்து நச்சரிக்கிறார்கள்.