Tamil Cinema News | சினிமா செய்திகள்
நடிப்பை விரும்பாத தளபதியின் மகன்.. எதில் ஆர்வமாக இருக்கிறார் தெரியுமா?
தளபதி விஜயின் மகன் சஞ்சய் நடிப்பை விரும்பாமல் இயக்குனராக வேண்டும் என முடிவு செய்து பட்டப்படிப்பை மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

vijay son sanjay
விஜய் சினிமா உலகில் தனக்கென மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை வைத்து இருப்பவர். தொடக்கத்தில் அவரின் நடிப்பிற்கு ஏணியாக அமைந்தவர் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர். கிட்டத்தட்ட அவரின் இயக்கத்தில் 7 படங்களில் நடித்தார். அதை தொடர்ந்து, அவருக்கு பல வாய்ப்புகள் அமைந்தது. இன்று தமிழ் சினிமாவில் ஜாம்பவானாக இருக்கிறார். தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தனது 62வது படத்தில் நடித்து வருகிறார். அப்படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருக்கிறது. தன் நடிப்பை ஒரு பக்கம் தெளிவாக எடுத்து செல்லும் தளபதி, குடும்பத்திற்கும் சரியாக நேரம் ஒதுக்கி வருகிறார்.
தனது தீவிர ரசிகையான சங்கீதாவை கடந்த 1999ம் ஆண்டு இந்து மற்றும் கிறிஸ்துவ முறைப்படி விஜய் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சஞ்சய் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் இருக்கிறார்கள். சஞ்சயை வேட்டைக்காரன் படத்திலும், திவ்யாவை தெறி படத்தின் மூலமும் தனது ரசிகர்களிடம் அறிமுகம் செய்து வைத்தார். சமீபத்தில், மகளின் பேட்மிண்டன் போட்டியை காண விஜய் நேரில் வந்து சத்தமில்லாமல் அமர்ந்து இருந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகியது. அதேப்போல, அமெரிக்கா இன்டர்நேஷனல் பள்ளியில் 12-ம் வகுப்பையும் சஞ்சய் முடித்து இருக்கிறார். அதன் பட்டமளிப்பு விழா வீடியோவும் இணையத்தளங்களில் வெளியாகி ஹிட் அடித்து வருகிறது.

vijay son sanjay
இந்நிலையில், சஞ்சய் தனது மேற்படிப்புக்காக கனடா செல்ல இருக்கிறார். அங்கு பிலிம் மேக்கிங் சம்மந்தப்பட்ட படிப்பை படிக்க இருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அப்பா போல நடிகராக இல்லாமல், விரைவில் அப்பாவை வைத்து வெள்ளித்திரையில் படம் இயக்கும் ஆசையில் உள்ளதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.
