fbpx
Connect with us

என் வாழ்க்கையை வாழ யாரும் சொல்லி தர தேவையில்லை : சமந்தா அதிரடி

Samantha

News / செய்திகள்

என் வாழ்க்கையை வாழ யாரும் சொல்லி தர தேவையில்லை : சமந்தா அதிரடி

சமூக வலைத்தளத்தில் புகைப்படத்தால் அதிக கிண்டலுக்கு ஆளாகும் சமந்தா தனது வாழ்க்கையை வாழ தனக்கு தெரியும் என நடிகை சமந்தா தெரிவித்து இருக்கிறார்.

samantha

samantha

தமிழ் படங்களில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கில் பிஸி நடிகையாக வலம் வருகிறார். சக நடிகரான நாக சைதன்யாவை காதலித்து வந்தவர். கடந்த வருடம் இரு மத முறைப்படி திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்தாலே அக்கா, அண்ணி கதாபாத்திரத்திற்கு கேட்கப்படும் நடிகைகள் மத்தியில் சமந்தாவின் கிரேஸ் இன்று வரை குறையவே இல்லை. ரங்கஸ்தலம் என்னும் தெலுங்கு படத்தில் அசல் கிராமத்து பெண்ணாக நடித்து பலரையும் கவர்ந்தவர். கோலிவுட் மார்க்கெட்டையும் விட்டு வைக்கவில்லை.

இரும்புதிரை, சீமராஜா உள்ளிட்ட மாஸ் ஹீரோக்களின் படங்களில் தொடர்ந்து நாயகியாக நடித்து வருகிறார். இது ஒரு புறமிக்க, சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் சமந்தா வெளியிடும் புகைப்படத்திற்கு ஏகப்பட்ட ட்ரோல்களும், கமெண்ட்களும் தொடர்ச்சியாக வந்து கொண்டு இருக்கிறது. திருமணத்திற்கு பிகினி புகைப்படம் வெளியிட்டவரின் இன்ஸ்டா பக்கத்தில் பெரும் எதிர்ப்பே நிலவியது. இதற்கெல்லாம் அமைதியாக இருந்து வந்த சமந்தா, தற்போது இதுகுறித்து பதில் அளித்து இருக்கிறார்.

Samantha

திருமணத்திற்கு பிறகு கடற்கரையில் பிகினி புகைப்படத்தை வெளியிட்டால் தவறாக நினைப்பார்கள் என்பது எனக்கும் தெரியும். கடற்கரையில் பிகினி போடாமல் புடவையா கட்ட முடியும். மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதில் நான் எதையுமே செய்யவில்லை. அதற்காக, நீ இதை தான் செய்ய வேண்டும். இதை தான் பகிர வேண்டும் என யாரும் சொல்ல உரிமை கிடையாது. கல்யாணமான பெண் என்பதாலே என்னை அவதூறாகப் பேசுகிறார்கள். என் வாழ்க்கையை வாழ யாரும் எனக்கு சொல்லத் தேவையில்லை. நான் பயப்படவும் இல்லை. இது எனக்கு தேவையும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top