Connect with us
Cinemapettai

Cinemapettai

janaki

Tamil Cinema News | சினிமா செய்திகள்

என்னால் பிறரையும் கொல்லாதீர்கள்: பாடகி ஜானகி

தமிழ் சினிமாவின் எவர் க்ரீன் பாடகி ஜானகி அம்மா உடல்நிலை குறித்து பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறார்.

பத்தாயிரத்திற்கும் அதிகமான பாடல்களைப் பாடியவர் எஸ்.ஜானகி. புகழ் பெற்ற திரைப்படப் பாடகியான இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பாடி இருக்கிறார். 1957ம் ஆண்டில் வெளிவந்த விதியின் விளையாட்டு என்ற படத்தில் இடம்பெற்ற பெண் என் ஆசை பாழானது ஏனோ என்ற பாடல் இவரது முதல் திரைப்பட பாடல் ஆகும்.

இதைத் தொடர்ந்து பல படங்களில் பாடும் வாய்ப்பு இவருக்கு கிட்டியது. தமிழ், தெலுங்கு மொழிகளில் பல பக்திப்பாடல்களைத் தாமே எழுதி இசையமைத்துப் பாடியுள்ளார். மௌனப் போராட்டம் என்ற தெலுங்குப் படத்தில் இசையமைப்பாளராகவும் இருந்து இருக்கிறார்.

ஜீவா, நயன்தாரா நடித்த திருநாள் படத்தில் வந்த தந்தையும் யாரோ என்ற பாடல் தான் ஜானகி கடைசியாக பாடிய தமிழ் பாடல் ஆகும். இதை தொடர்ந்து, தனக்கு வயதாகி விட்டது எனத் தெரிவித்து பாடல் பாடுவதில் இருந்து விலகுவதாக 2016ம் ஆண்டு ஜானகி அறிவித்தார். இதனால் அவருக்கு ரசிகர்கள் கண்ணீர் மல்க பிரியா விடை கொடுத்தனர். சமீபகாலமாக, ஜானகியின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக ஒரு தகவல் தீயாக சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

இதுகுறித்து, அமைதியாக மறுப்பு தெரிவித்து வந்த ஜானகி இம்முறை கோபத்துடன் பதில் அளித்து இருக்கிறார். எனக்கு எதுவும் இல்லை. நான் நன்றாக தான் இருக்கிறேன். தன் மீது அன்பு கொண்டவர் என்னை தொடர்பு கொண்டு அழுகின்றனர். என்னை பற்றிய வதந்தியை பரப்பி பலருக்கு மாரடைப்பு ஏற்படுத்தி கொல்லாதீர்கள் எனக் குறிப்பிட்டு இருக்கிறார். பல காலமாக, நன்றாக இருக்கும் திரை பிரபலங்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தும் பழக்கம் அதிகமாகி இருப்பதும், சில நிமிடங்களில் அப்பிரபலங்கள் கடுப்புடன் நான் இருக்கிறேன் என தெரிவிப்பதும் வழக்கமாகி வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top