Tamil Cinema News | சினிமா செய்திகள்
மறக்க முடியுமா லான்ஸ் குளூஸ்னரை???? 1999 ஆம் ஆண்டு உலக கோப்பை அரை இறுதி போட்டியை???
கிரிக்கெட் போட்டிகளில் பல சுவாரஸ்யமான போட்டிகள் இருந்தாலும் யாராலும் மறக்க முடியாத போட்டியென்றால் அது 1999 உலக கோப்பை அறையிறுதி ஆட்டமே!!!
லான்ஸ் குளூஸ்னர் இந்த பெயரை தெரியாத கிரிக்கெட் ரசிகன் இல்லை ஒரு காலத்தில் இன்றைய பெண் ஸ்டோக்ஸ் போல் அன்றைய காலகட்டத்தின் ஆல் ரவுண்டர்.
அரை இறுதியில் ஆஸ்திரேலியாவும் தென் ஆப்ரிக்காவும் மோதின முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 213 ரன்களை அடித்தது அதை டார்கெட் செய்த தென் ஆபிரிக்காவுக்கு கடைசி ஓவரில் 6 பந்துகளில் 9 ரன்கள் தேவை கைவசம் இருப்பது ஒரு விக்கெட் பிளெம்மிங் வீசிய முதல் இரண்டு பந்துகளை பவுண்டரிக்கு விரட்டினார் குளூஸ்னர் அடுத்த பந்தில் ரன் ஏதும் இல்லை அடுத்த பந்தை ஆலன் டொனால்டு செய்த முட்டாள் தனத்தால் ரன் அவுட் ஆகி விடுகிறார்
போட்டி சமநிலையை அடைந்து முதல் லீக் போட்டியில் வெற்றி பெற்றதன் அடிப்படையில் ஆஸ்திரேலியா இறுதி போட்டிக்கு முன்னேறி கோப்பையையும் வாங்கியது. கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் இன்றும் மறக்க முடியாத போட்டியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
