Tamil Cinema News | சினிமா செய்திகள்
யார் மீதும் காதலில் விழுந்து விடாதே… முன்னணி நடிகையை எச்சரித்த தளபதி
தளபதி விஜய், நடிகையான சங்கீதாவிடம் யார் மீதும் காதலில் விழுந்து விடாமல் எச்சரிக்கையாக இருக்கும்படி தெரிவித்ததாக கூறி இருக்கிறார்.
காதலே நிம்மதி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் சங்கீதா. தமிழ், மலையாள திரையுலகில் பிஸியாக நடித்து வந்தவர். சமீபகாலமாக திரைப்படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டு இருக்கிறார். சர்ச்சையை ஏற்படுத்திய எங்க வீட்டு மாப்பிள்ளை ரியாலிட்டி ஷோவின் தொகுப்பாளினியாக இருந்தவருக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இவர் கோலிவுட்டின் பிரபல பாடகரான க்ரிஷை 2009ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு சிவியா என்ற மகள் மட்டும் இருக்கிறார்.
இந்நிலையில், சங்கீதா தனக்கும் தளபதி விஜயிற்கும் இடையேயான நட்பு குறித்து சமீபத்திய பேட்டியில் மனம் திறந்து இருக்கிறார். அவர் கூறுகையில், எனது தாத்தாவின் நிறுவனத்தில் தான் இயக்குனரும், விஜயின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் பணியாற்றி வந்தார். அதனால் எங்கள் இரு குடும்பத்திற்கு நல்ல நட்பு இருந்து வந்தது. விஜயின் கோயமுத்தூர் மாப்பிள்ளை படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு அமைந்தது. எனது அம்மாவும் நான் அந்த படத்தில் அறிமுகமாவதை தான் விரும்பினார். ஆனால் சில காரணங்களால் அப்படத்தின் வாய்ப்பு தட்டி போனது. விஜய் ஸ்டார் நைட் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது விஜயும், நானும் க்ளோஸ் ப்ரண்ட்ஸாக மாறினோம். என்னுடன் பேசும் பொழுதெல்லாம் யார் மீதும் காதலில் விழுந்து விடாதே என எச்சரித்து கொண்டே இருப்பார். நான் பாதுகாப்பாக இருப்பதை அவர் விரும்பினார். என்னை பற்றி எதும் தகவல் ஊடகங்களில் வந்தால் முதல் ஆளாக தொடர்பு கொண்டு அதை தெளிவுபடுத்திக் கொள்வார்.
எனக்கும் கிரிஷுக்கும் காதல் ஏற்பட்ட போது, விஜயை நேரில் சந்தித்து அவரை அறிமுகம் செய்து வைத்தேன். எப்படி எடுத்து கொள்வாரோ என நினைத்த எனக்கு, அவர் கிரிஷை வரவேற்றவிதம் மகிழ்ச்சி தந்தது. என்னைக் கட்டியணைத்து கிரிஷ் நல்ல பையன் என்றும் இருவரின் ஜோடிப்பொருத்தம் நன்றாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். என்னைப் பொறுத்தவரை விஜய் என்னுடைய நலனில் அதிக அக்கறை கொண்டவர்.
எனக்கும் விஜயிற்கும் ஒரு பெரிய ஒற்றுமை இருக்கிறது. அவரின் மனைவி பெயர் சங்கீதா. என் கணவர் பெயர் விஜய். ஆம், கிரிஷின் உண்மையான பெயர் விஜய் தான். பெயர்ப்பொருத்தமாக இருக்கிறதல்லவா எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.
