தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு ஆதரவாக போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

நேற்று அலங்காநல்லூரில் விடிய விடிய ஜல்லிக்கட்டு ஆர்வலர்களால் நடத்தப்பட்ட போராட்டங்களில் கலந்துகொண்டவர்களை காவல் துறை கைது செய்து சோழவந்தான் அருகே ஒரு மண்டபத்தில் அடைத்தது.

இந்நிலையில் இன்று சென்னை, கோவை, சேலம், தஞ்சாவூர் போன்ற தமிழகத்தின் முக்கிய இடங்களில் இளைஞர்கள் போராட்ட களத்தில் குதித்துள்ளனர், நேற்று இரவு நடந்த மெரினா போராட்டத்தில் பல திரைபிரபலங்கள் கலந்துகொண்டனர். இதில் இயக்குனர் சேரனும் கலந்து கொண்டு தனது கோபத்தை பகிர்ந்தார், அதாவது தமிழகத்திலே காசு வாங்கிட்டு ஒட்டு போடும் அடிமைகளை திருத்துவது இளைஞர்களான உங்களால் மட்டுமே முடியும், சினிமாக்காரனால் முடியாது.

ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும், நடக்கணும். இதற்கு மத்திய அரசும், மாநில அரசும் செவி சாய்க்கணும்.

வெறும் ஓட்டுக்காக மட்டும் எங்களிடம் வராதீங்க, எங்கள் காலச்சாரத்த, பண்பாட்ட பாதுக்காக்க முடியாத உங்களால, இனிமேல் எங்களால் உங்களை பாதுக்காக்க முடியாது என்று கூறியுள்ளார்.