Tamil Cinema News | சினிமா செய்திகள்
இதை செய்ய வேண்டாம் ரசிகர்களுக்கு அன்பு கட்டளையிட்ட கார்த்திக்.!
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் தான் கார்த்திக் இவர் தனது நடிப்பு திறமையால் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை பெற்றுள்ளார்.
பொழுதுபோக்கு படங்களில் தன்னால் முடிந்த வரை சில சமூக விஷயங்களை பேசக்கூடிய நடிகராக இருப்பவர். பிறந்த நாள் கொண்டாடிய அவருக்கு திரையுலக பிரபலங் பலர் வாழ்த்தினர்.
அதே சமயம் ரசிகர்களும் கார்த்திக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய வண்ணம் இருந்தனர்.இதை கவனித்த கார்த்தி ரசிகர்களிடம் ஒரு அன்பு கட்டளை விடுத்தார். தூத்துகுடியில் ஸ்டெர்லைட் போராட்டதின்போது 13 பேர்களின் உயிர்கள் பலியான நிலையில் தமிழகமே துக்கத்தில் இருக்கும்போது எனக்காக பிறந்த நாள் கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்ய வேண்டாம் என்று ரசிகர்களை கேட்டு கொள்கிறேன்.
தமிழகத்தில் உள்ள தமிழர்கள் மட்டுமின்றி உலகில் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் இதுவொரு துக்க சம்பவம் ஆகும் என்று தெரிவித்தார். மேலும் இவர் தற்பொழுது கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்து வருகிறார்.
