மலர் டீச்சர் என ரசிகர்களிடத்தில் பெரும் கவனிப்பை ஈர்த்தவர் .இந்திய திரைப்பட துறையில் இருக்கும் மிக குறைவான தமிழ் நடிகைகளில் ஒருவர்,தமிழ் நாட்டை சேர்ந்தவர் என்றாலும்,கதாநாயகியாக அறிமுகமானது மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த “பிரேமம்”திரைப்படத்தில்.

நான் தமிழ்ப் பெண், எனவே இனிமேல் என்னை மலையாளப் பெண் என்று குறிப்பிடாதீர்கள் என்றும் நடிகை சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.

saipallavi

மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தில் மலர் டீச்சராக நடித்து ரசிகர்களின் மனதில் குடிகொண்டவர் நடிகை சாய் பல்லவி. இப்போது கூட அவரை வெளியே பார்க்கும் ரசிகர்கள் பிரேமம் படத்தில் அவர் ஏற்று நடித்த மலர் டீச்சர் என்றே அழைக்கின்றனர்.

கோயம்புத்தூரில் உள்ள ஆல்வின் கான்வென்ட் மெட்ரிக்.மேல் நிலைப்பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தவர்,ஜார்ஜியாவில் உள்ள டிபிலிசி ஸ்டேட் யூனிவர்சிட்டியில் மருத்துவ பட்டப்படிப்பை முடித்துள்ளார்.

saipallavi

இதையடுத்து, தெலுங்கு தேசத்துக்குப் போன சாய் பல்லவி அங்கே ஃபிடா என்ற படத்தில் நடித்து, அந்த ரசிகர்களையும் தன்வசப்படுத்தினார்.

அடுத்து தமிழ் ரசிகர்களை குறிவைத்துள்ள சாய் பல்லவி தற்போது, கரு என்ற படம் வாயிலாக தமிழ் சினிமாவுக்கு வந்துள்ளார்.

இந்நிலையில், சில ஊடகங்களில் அவரை மலையாளி என்று குறிப்பிட்டு வருகின்றனர். அத்துடன், ஒரு திரைப்பட விழாவில் கலந்து கொண்ட போது, மேடையில் சாய் பல்லவியை மலையாளப் பெண் என அடையாளப் படுத்தியுள்ளனர். இதனால் சாய்பல்லவி அதிருப்தி அடைந்துள்ளார். இது குறித்து சாய் பல்லவி கூறுகையில்:

saipallavi

இனிமேல் யாரும் என்னை மலையாளி என குறிப்பிட வேண்டாம். ஏனென்றால், நானொரு சுத்தமான தமிழ் பெண். தமிழ்நாட்டில் உள்ள கோயம்புத்தூரில் தான் நான் பிறந்தேன்.

என் பெற்றோர் தொழில் நிமித்தமாக கேரளாவில் குடியேறினார்கள். எனவே,பிறப்பால் நான் தமிழ் பெண் தான், தமிழ் பெண் என்கிற அடையாளத்தையே விரும்புகிறேன். ஆகவே, இனி என்னை தமிழ் பெண் என்று குறிப்பிடுங்கள் என்றார் சாய் பல்லவி.