Tamil Cinema News | சினிமா செய்திகள்
கோடி,கோடியா கொட்டி கொடுத்தாலும் இந்த படத்தில் மட்டும் நடிக்கமாட்டேன் ரஜினி ஒரே போடு.!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்பொழுது காலா, 2.0 என இரண்டு படத்தில் நடித்துள்ளார் இந்த படம் இந்த வருடத்தில் ரிலீஸ் ஆகிறது இதனை எதிர்பார்த்து ரஜினி ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
மேலும் ரஜினி தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்துள்ளார் அதற்க்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த அரசியல் அறிவிப்பு அறிவித்தவுடன் பல கட்சிகள் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளார்கள்.
இதை தொடந்து நடிகர் கமல்ஹாசனும் தனது அரசியல் அறிவிப்பை அறிவிக்க இருக்கிறார்,மேலும் ரஜினி தனது கட்சியின் பெயர் கொடி ஆகியவற்றை மதுரையில் பிரமாண்ட மாநாடு ஒன்றை நடத்தி அனைத்துரசிகர்களின் முன்னணியில் அறிவிப்பதாக கூறியுள்ளார்.
அதனால் தமிழகம் முழுவதும் இவரின் அறிவிப்பை எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கிறார்கள் இந்த நிலையில் சமீபத்தில் மலேசியாவில் நடைபெற்ற கலைவிழாவில் ரஜினி கலந்துகொண்டார்.
அங்கே தங்கியிருந்த ரஜினியை பிரபல நிறுவனம் சந்தித்தது சந்தித்தது மட்டும் இன்றி அவரிடம் கம்பேனி விளம்பரத்தில் நடிக்குமாறு கேட்டுள்ளார்கள் அதற்க்கு 30 கோடி சம்பளம் தருகிறோம் என கூறியுள்ளார்.
ஆனால் இதை கேட்ட ரஜினி எத்தனை கோடி கொடுத்தாலும் விளம்பரத்தில் நடிக்கமாட்டேன் என திட்டவட்டமாக கூறியுள்ளார்.
இதில் இருந்து என்ன தெரிகிறது கோடி கோடியாக கொட்டி கொடுத்தாலும் விளம்பர படத்தில் மட்டும் நடிக்கமாட்டார் ரஜினி.
