சிவகார்த்திகேயன் நடிக்கமாட்டேன் என்று பகீரங்கமாக மேடையில் தெரிவித்தார்,அதனால் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர் இனிமேல் ரங்கநாதன் தெரு வியாபாரிகளுக்கு வந்தால் ஆச்சர்யமில்லை.ஏன் என்றால் சிவகார்த்திகேயன் சொன்னது சினிமாவில் நடிப்பது பற்றியல்ல விளம்பரங்களில் நடிப்பது பற்றி.

sivakarthikeyan

தமிழினல் முன்னணி நடிகர்கள் படத்தை தவிர அதிகம் துட்டு பார்ப்பது விளம்பரங்களால் தான் ,அதுவும் தமிழ் ஹீரோ இதுவரை யாருமே வாங்காத அதிக சம்பளத்தை போத்தீஸ் விளம்பரத்திற்காக வாங்கினார் உலக நாயகன். நான்கு நாளில் 10 கோடி சம்பளம் அஜித்தும் விளம்பரத்துக்கு வருவாரா என காத்துக்கிடக்கின்றது கார்ப்பரேட் விளம்பரக் கம்பெனிகள். அன்று விஜய் நடித்த கோக் விளம்பரத்தை இப்பவும் இழுத்து வச்சு செய்கிறார்கள் அஜீத் ரசிகர்கள்.

Sivakarthikeyan-Velaikkaran
Sivakarthikeyan

இந்த லிஸ்ட்டில் சிவகார்த்திகேயனுக்கும் ஒரு பெரிய இடம் இருக்கிறது. ஆனால் குழியில் விழுவதற்கு முன்பே சுதாரித்துக் கொள்ள வேண்டும் என நினைக்கிறார். சென்னையில் பிரமாண்டமாக நடந்த ‘வேலைக்காரன்’ ஆடியோ வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் இதை பற்றி அறிவித்த விஷயம் நிஜமாகவே பாராட்டுக்குரியதுதான்.

Sivakarthikeyan
Sivakarthikeyan

நான் இதுவரைக்கும் ஒரேயொரு விளம்பர படத்தில்தான் நடிச்சுருக்கேன் அது எனக்கு தெரியும்.ஆனால் இனிமேல் எந்த விளம்பரப் படங்களிலும் நடிக்கப் மாட்டேன் என்று முடிவெடுத்திருக்கிறேன். அதற்கு மூல காரணம் வேலைக்காரன் படத்தின் கதைகளம் தான். இது குறித்து நான் அதிகம் விளக்க முடியாது.ஏன் என்றால் அப்படி சொனால் கதையை சொன்ன மாதிரி ஆகிவிடும். படம் வந்த பின்பு நான் ஏன் இப்படி ஒரு  முடிவெடுத்தேன் என்பது உங்களுக்கு தெரியும் என்றார் நடிகர் சிவகர்த்திகேயன்.

Sivakarthikeyan

திரைப்படத்துறையில் மிக முக்கிய இடத்தை நோக்கி பயணித்து  கொண்டிருக்கும் சிவகார்த்திகேயனின் இந்த முடிவை, பாரபட்சமில்லாமல் அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள் என்பது நிச்சயம்.