சனிக்கிழமை, டிசம்பர் 14, 2024

இதுக்கு தமிழ் பிக் பாஸே பரவா இல்ல.. TRP-க்காக அநியாயம் பண்ணும் சல்மான்கான்

பிக்பாஸ் வீட்டில் பரபரப்பான நிகழ்வுகள், சண்டைகள், ஏராளமான பேச்சுகள் என மக்களை ஈர்த்து வந்த நிலையில், தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் களமிறக்கப்பட்ட 19வது போட்டியாளரால் பிக்பாஸ் பிரச்சனை ஒன்றை சந்தித்துள்ளது.

ஹிந்தி பிக் பாஸ்-ஐ பார்க்கும்போது.. இதுக்கு தமிழே பரவா இல்லை என்று தான் தோன்றுகிறது. இங்கயாவது, TRP-க்காக சண்டை தான் போட வைக்கிறார்கள். அங்கு வேற மாதிரி செய்கிறார்கள். “என்னடா நடக்குது இங்க” என்று அவ்வப்போது, தமிழ் ஆடியன்ஸும் ஹிந்தி பிக் பாசை பார்ப்பார்கள். அப்படி சமீபத்தில் பார்த்த தமிழ் ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கின்றனர்

19வது போட்டியாளரை வைத்து சல்மான் கான் செய்யும் அழிச்சாட்டியம்

தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் களமிறக்கப்பட்ட 19வது போட்டியாளரால் பிக்பாஸ் பிரச்சனை ஒன்றை சந்தித்துள்ளது. அதாவது கதராஜ் எனப் பெயரிடப்பட்ட கழுதை ஒன்றை பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்பட்டுள்ளது.

இந்தக் கழுதையை அங்குள்ள பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் பராமரிக்க வேண்டும் எனவும் டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. பிக்பாஸின் இந்த முடிவுக்கு ஒரு சிலர் ஆதரவாகவும், ஒரு சிலர் எதிராகவும் கருத்து சொல்லி வந்த நிலையில், இந்த பிரச்சனை பூதாகரமாக வெடித்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வரும் போட்டியாளர்கள் அவர்களது சம்மதத்துடன் வருகின்றனர் அதில் ஒன்றும் பிரச்சனை இல்லை. ஆனால், இந்த கழுதையை எந்த சம்மதத்தின் அடிப்படையில் இங்கு கொண்டு வந்துள்ளீர்கள்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பீட்டாவின் வழக்கறிஞரான சௌர்யா அகர்வால், பிக்பாஸ் சீசன் 18ன் நிகழ்ச்சி தொகுப்பாளர் சல்மான் கானுக்கு ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார். ஒரு விலங்கை தங்களின் நிகழ்ச்சியின் விளம்பரத்திற்காகவும் அதை காமெடி பொருளாகவும் பயன்படுத்திக் கொள்வது சரியானது அல்ல. அதை உடனடியாக பீட்டாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

மக்களின் கவனத்தை ஈர்க்க, பணம் சம்பாதிக்க இன்னும் என்னவெல்லாம் செய்யபோகிறார்களோ..

- Advertisement -

Trending News